ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியிடமிருந்து சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் –  பிரதமர் மோடி பேச்சு

ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியிடமிருந்து சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு

Share it if you like it

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியிடமிருந்து சனாதனிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இந்த ஐ என் டி ஐ ஏ கூட்டணி சார்ந்தவர்கள் சனாதனத்திற்கு எதிரானவர்கள். அவர்கள் சனாதன தர்மத்தை அழிக்க எல்லா வகையிலும் முயல்கிறார்கள். அவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக சனாதனிகள் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி இருக்கிறார். சனாதனிகள் அவர்களின் வாழ்வியல் உள்ளிட்டவற்றை சிதைக்க இந்த ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியினர் பல வகையிலும் முயல்வதாகவும் எவ்வளவு பேர் எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அனைத்தையும் கடந்து சனாதனம் உயர்ந்து வாழும் என்றும் அவர் தெரிவித்தார்.

சனாதனத்தின் விரோதமான பேச்சுக்கள் பாரத கலாச்சாரம் ஆன்மீகத்தின் மீதான தாக்குதல் . சனாதன தர்மத்தை பாதுகாக்க வேண்டியது இங்குள்ள சனாதனிகளின் கடமை என்றும் பேசிய பிரதமர் இந்த ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியில் இருப்பவர்கள் மிகவும் தலைக்கனம் பிடித்தவர்கள். அவர்களின் சனாதன விரோத போக்கு சனாதன ஒழிப்பிற்கான முயற்சிகளில் அவர்களை எந்த எல்லைக்கும் கொண்டு போகும் என்பதால் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .நமது சனாதன தர்மத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் பேசி இருக்கிறார்.

பிரதமர் குறிப்பிடும் இந்த ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியின் தலைமை கட்சியாக செயல்படுவது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியலும் சிறுபான்மை பாசமும் – பெரும்பான்மை விரோதமும் பல கட்டங்களில் வெளிப்பட்டிருக்கிறது. குறிப்பாக அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரம் – காசி ஞானவாபி மசூதி விவகாரம் – பிரதம மந்திரியின் கங்கை நதி தூய்மை திட்டம் – காசி வாரணாசி நகரை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு அந்நகரை ஆன்மீக தலமாக புனரமைப்பு செய்த திட்டம் என்று அனைத்திற்கும் கடுமையான எதிர்ப்பு இடையூறுகள் முட்டுக்கட்டைகளை செய்தது காங்கிரஸ் கட்சி.

மேலும் பிரதமரின் அயோத்தி ராமஜென்ம பூமியின் பூமி பூஜையில் பங்கேற்றது – காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தியது – காசி விஸ்வநாதர் ஆலயத்தை அதன் சுற்றுப்புறங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு விஸ்வநாதன் கேரி டோர் என்னும் உள்கட்டமைப்பு பணிகளை நவீனமாக கட்டமைத்தது என்று அனைத்து வளர்ச்சி பணிகளையும் ஆன்மீகம் சார்ந்த பணிகளையும் மதச்சாயம் பூசி மலிவான அரசியல் செய்தது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள். காஷ்மீர் மாநிலத்தில் கட்ரா வைஷ்ணவி தேவி யாத்திரை – அமர்நாத் பனி லிங்க யாத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக விஷயங்களுக்கும் அது தொடர்பான கண்காணிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளில் கூட மத்திய அரசின் நடவடிக்கைகளை சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக மலிவாக விமர்சனம் செய்வது காங்கிரஸின் அரசியல் வழக்கம்.

காங்கிரஸின் மிக நெருங்கிய கூட்டணி கட்சியும் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியின் பிரதான பிராந்திய கட்சியுமான திமுக முழுமையான இந்து விரோத கட்சி. அந்த கட்சி தலைவரின் மகனும் அடுத்த தலைவர் என்று கட்சிக்காரர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் திமுக என்ற கட்சியை சனாதன தர்மத்தை அழிப்பதுக்காகத்தான் உருவாக்கப்பட்டது. எங்களது ஆட்சி பறிபோனாலும் பரவாயில்லை. சனாதன தர்மத்தை ஒழிப்பது தான் எங்களின் ஒரே குறிக்கோள் என்று வெளிப்படையாக பேசி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டு கால திமுகாவின் ஆட்சியில் உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணம் காட்டி ஆக்கிரமிப்பு என்ற பெயரில் 200க்கும் மேற்பட்ட இந்து ஆன்மீக கோவில்கள் தமிழக முழுவதிலும் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது .

இதற்கு இந்து அறநிலையத்துறை பொதுப்பணித்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட மூன்று தமிழக அமைச்சரகங்களும் மாநில அரசும் முழு உடந்தையாக இருந்தது. இந்நிகழ்வு எதிர்த்து தமிழகம் முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை பொதுமக்களும் இந்து அமைப்பினரும் முன்னெடுத்த போது இந்த ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி சார்ந்த கட்சிக்காரர்கள் யாரும் அதற்கு ஆதரவோ பங்களிப்பு வழங்கவில்லை ஆனால் இந்து ஆலயங்களின் இடிப்பு என்ற திமுகவின் அராஜகத்தை வெளிப்படையாக ஆதரித்து இந்து விரோத அரசியல் செய்தார்கள். அந்த வகையில் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணிகாரர்கள் வன்மம் பிடித்த இந்து விரோதக்காரர்கள் என்று பிரதமர் மோடி சொல்வது 100 சதம் உண்மையே.

திமுகவின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதிலும் ஆன்மீக தலங்கள் இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் சூறையாடப்படுகிறது. ஆலயத்தின் நிலங்கள் பொக்கிஷங்கள் சிலைகள் வரை பாதுகாப்பில்லாமல் கொள்ளை போவதும் தொடர்கிறது. ஆலய நிர்வாகம் என்ற பெயரில் ஆகமங்கள் முதல் கருவறை அர்ச்சகர் நியமனம் வரை அனைத்திலும் அத்துமீறி சனாதனத்தின் மாண்பை சிதைப்பதையே திமுக தினசரி நடவடிக்கையாக வைத்திருக்கிறது. இந்த திமுகவின் இந்து விரோத நடவடிக்கைகளை சனாதன எதிர்ப்பு அரசியலை இதுவரையில் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியில் இருக்கும் எந்த ஒரு கட்சியும் நேரடியாக கண்டித்ததோ எதிர்த்ததோ கிடையாது. ஆனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் திமுகவை பாதுகாக்கும் நடவடிக்கையில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்கிறார்கள்.

சமீபத்தில் தமிழகத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் மாநாடு நடத்த முழு அனுமதி கொடுத்து அதில் பங்கேற்ற சனாதனத்தை எதிர்த்தால் மட்டும் போதாது. அழிக்க வேண்டும். எப்படி டெங்கு மலேரியா கொரோனா உள்ளிட்டவற்றை அழித்தோமோ? அதே போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று ஒரு மாநில அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் ஒரு கட்சியின் இளைஞரணி பொறுப்பில் இருந்த முதல்வரின் மகன் உதயநிதி பேசியதற்கு முதலில் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டியது காங்கிரஸ் கட்சி . ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து . அவர்களின் கருத்துக்கும் எங்களது கட்சிக்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை என்று மழுப்பலாக பேசி ஒதுங்கிக் கொண்டது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியின் முக்கிய பெண் தலைவருமான மம்தா பானர்ஜி உதயநிதியின் பேச்சை புரிதல் இல்லாத சிறுபிள்ளைத்தனமான பேச்சு என்று பொத்தாம் பொதுவாக விமர்சித்தார் . தவிர அவரது சனாதன ஒழிப்பு பேச்சிற்கு நேரடியான எதிர்ப்போ கண்டனமோ தெரிவிக்கவில்லை. மாறாக தேசிய அளவில் அரசியலில் அங்கம் வகிக்கும் ஒரு கூட்டணியின் கட்சியாக இருந்து கொண்டு இது போல் ஒரு குறிப்பிட்ட மதத்தை வாழ்வியலை துவேஷிப்பது நாகரிகம் அல்ல என்ற குறைந்தபட்ச கண்டனத்தை கூட அவர் திமுகவின் சித்தாந்தத்தின் மீது அல்லது அவர்களின் சனாதன அரசியலின் மீதும் இதுவரை முன்வைக்கவில்லை.

இந்த ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியில் இருக்கும் காங்கிரஸின் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சி மட்டுமே திமுகவின் இந்த சனாதன எதிர்ப்பு பேச்சை கடுமையாக விமர்சித்து எதிர்ப்பும் தெரிவித்து இருக்கிறது. ஆனால் அது எத்தனை நாளைக்கு நீடிக்கும் ? என்று சொல்ல முடியாது. காரணம் இதே சிவசேனா கட்சி தான் பாஜக கட்சி சார்ந்தவர்கள் ஹனுமன் சாலிசா பாடிய காரணத்திற்காக பாஜகவின் எம்எல்ஏக்களையும் கட்சி நிர்வாகிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சனாதன துறவிகள் என்ற காரணத்தால் மட்டும். அடித்து கொன்று எரிக்கப்பட்ட இந்து சன்யாசிகள் படுகொலையை காங்கிரஸ் தயவு வேண்டும் ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று மூடி மறைத்து சாதாரணமாக கடந்து போனது. ஆட்சி அதிகாரமா? இந்துத்துவமா ? என்றால் வந்து வந்தால் ஆட்சி அதிகாரம் தான் என்று காங்கிரசோடு கைகோர்த்தது தான் சிவசேனா கட்சி என்பது கடந்த கால – சமகால வரலாறு.

இந்த ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்டு கட்சியினர் பற்றி சொல்லவே தேவையில்லை. அவர்களில் இந்திய கம்யூனிசம் – மார்க்சிய கம்யூனிசம் என்று சித்தாந்த அடிப்படையில் மாறுபாடு இருக்கலாம். தேசிய அரசியல் – பிராந்திய அரசியல் என்று நிலைப்பாடுகள் மாறலாம் .ஆனால் அவர்களின் இந்து எதிர்ப்பு மனநிலையும் சனாதன ஒழிப்பு அரசியலும் என்றைக்கும் மாறுவதில்லை. கேரளாவில் சபரிமலையில் பெண்கள் நுழைய வேண்டும் அதன் மூலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் யுகம் யுகமாக இருக்கும் மாண்பை சிதைக்க வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் சனாதன விரோதம் உலகறிந்த ரகசியம். இதில் காங்கிரஸ் திமுக திரினாமூல் என்ற அத்தனை கட்சிகளும் கம்யூனிஸ்ட்களுக்கு துணை நின்றது. கேரளாவில் சபரிமலையில் அத்துமீறி பெண்களை நுழைய வைக்கும் போராட்டம் முதல் தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கவும் பெண்களையும் அர்ச்சகர் ஆக்குவோம் என்ற திமுகவின் அராஜகம் வரை அத்தனை விஷயங்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை நிற்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள்.

தமிழகத்தில் திக அமைப்பினர் திமுகவின் ஆதரவு அமைப்புகள் கட்சிகள் நடத்தும் சனாதன எதிர்ப்பு மாநாடு சனாதன ஒழிப்பு மாநாடு இந்து விரோத கருத்தியல் பரப்பும் விவாதங்கள் கருத்தரங்குகள் என்று அனைத்து இடத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தவறாமல் பங்கேற்பார்கள். தி க திமுக அமைப்பினருக்கு ஆதரவாக தங்களது இந்து விரோத சனாதன எதிர்ப்பு கருத்துக்களையும் இந்து புராணங்கள் வழிபாடுகள் உள்ளிட்டவற்றை அவமதிப்பையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள்..

அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரத்தில் முழுமையான தொல்லியல் ஆய்வு பணியில் ஈடுபடும்போது அந்தக் குழுவில் இருந்த கேரளாவை சார்ந்த ஒரு இஸ்லாமிய பேராசிரியர் உண்மை தன்மையை ஆவணப்படுத்தி இது கோவில் இருந்த இடம் தான் அதற்கான அத்தனை ஆவணங்களும் இருக்கிறது என்று அப்பழுக்கில்லாத நேர்மையோடு நடந்து கொண்டார் . அதற்காக எவ்வளவோ மிரட்டல்கள் உயிர் ஆபத்துக்களைக் கூட அவர் கடந்து வந்தார். ஆனால் அதே குழுவில் இருந்த ஒரு கம்யூனிஸ சார்புடைய பேராசிரியர் அங்கு ஆலயம் இருந்ததற்கான எந்த தடயமும் இல்லை என்று ஒரு போலியான கருத்தியலை கட்டமைக்க முயன்று அதில் தோல்வி அடைந்து நீதிமன்றத்திலும் குட்டுப்பட்டார் . இன்று வரை அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரம் உள்ளிட்ட இந்து ஆன்மீக வழிபாட்டுத் தலங்களில் ஆக்கிரமிப்பு அதை மீட்பதற்கான சட்டப் போராட்டங்களில் பெரும்பான்மை இந்து மக்களுக்கு எதிராகவும் நியாயத்திற்கு எதிராகவும் வாக்கு வாங்கி அரசியலுக்காக காங்கிரஸ் ஆதரவாக சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக சனாதன எதிர்ப்பு இந்து எதிர்ப்பு மனநிலையில்தான் இன்றளவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடு முழுவதும் செயல்படுகிறார்கள்.

இந்த ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியில் இதர கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் நித்திஷ் குமார் – அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பிராந்திய கட்சிக்காரர்களும் வாக்கு வாங்கி அரசியலுக்காகவும் தேசிய அளவில் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டிற்காகவும் இந்து விரோத சனாதன எதிர்ப்பு நிலைப்பாடு அரசியலையே செய்து வருகிறார்கள். இவர்கள் அத்தனை பேரும் அயோத்தி ராமஜன்ம பூமி விவகாரத்தில் ஆவணங்களுக்கு எதிராகவும் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் தங்களின் பெரும்பான்மை விரோதத்தை சிறுபான்மை அரசியல் வாக்கு மங்கி அரசியலுக்காக அப்பட்டமாக வெளிப்படுத்தியவர்கள். காஷ்மீரில் பிரிவினை ஆதரித்த கட்சிகள். பிரிவினைவாதிகளை வெளிப்படையாக ஆதரித்தவர்கள். காஷ்மீரின் இந்து பண்டிட் மக்கள் சொந்த நாட்டில் அகதியான போது அதை தடுக்கவும் கண்டிக்கவோ முன் வராதவர்கள். ஆனால் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை எதிர்த்து ஓரணியில் திரண்டு நின்று மத்திய அரசை எதிர்த்தவர்கள்.

இவர்களில் பலரும் மங்கல அடையாளங்களோடு சனாதனிகளாக வாழ்பவர்கள். ஆனால்தங்களை சனாதனிகளாக அடையாளப்படுத்த மாட்டார்கள். காரணம் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல். அவர்களின் தனிப்பட்ட வாழ்வியலில் சனாதனத்தின் நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகளை முன்னெடுப்பவர்கள். ஆனால் கட்சி அரசியல் ஆட்சி அதிகாரம் என்று வரும்போது சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்கு ஆதரவாக பெரும்பான்மை விரோத அரசியல் செய்பவர்கள். மேலும் இந்த மண்ணின் சனாதன தர்மம் பெரும்பான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசியல் செய்துவரும் பாஜக கட்சி மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளை எதிர்க்கும் காரணமாக ஒட்டுமொத்த சனாதன தர்மத்தையும் அந்த தர்மத்தின் வழியில் வாழும் மக்களையும் அவமதிக்கவும் துணிந்தவர்கள்.

சனாதனத்தின் மீதான தாக்குதல் என்பது ஏதோ பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்து அமைப்புகளுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு என்று இங்கு பலரும் கடந்து போகிறார்கள்.அந்த நிலைப்பாடு தான் இங்குள்ள பெரும்பான்மை மக்களின் பலவீனமாக இங்கு உள்ள சனாதன விரோத அரசியல்வாதிகளின் பெரும் பலமாக இருக்கிறது .அந்த வகையில் இதை தகர்த்தால் மட்டுமே சனாதன தர்மத்தின் மீதான தாக்குதலை அரசியல் கண்ணோட்டத்தில் சாமான்ய மக்களும் பார்க்கும்படி அவர்களின் பார்வையில் கொண்டு சேர்க்க முடியும். சனாதன தர்மத்தின் விரோதிகள் இந்த மண்ணுக்கும் – மக்களுக்கும் விரோதிகள் என்ற நிலைப்பாட்டை இங்குள்ள மக்களுக்கு புரிய வைத்தால் மட்டுமே இந்த மண்ணின் தர்மத்தை பாதுகாக்க முடியும் . அந்த சனாதன எதிர்ப்பு அரசியலை செய்யும் அரசியல்வாதிகளின் கொட்டத்தையும் அடக்க முடியும் என்று பிரதமர் மோடி உறுதியாக நம்புகிறார்.அதனால் தான் எல்லா மட்டத்திலும் சனாதன தர்மத்தின் மாண்பை பேசி வருகிறார். அதன் உன்னதமான வழியில் தானும் வாழ்ந்து ஆட்சி செய்கிறார். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஐஎன்டிஐஏ கூட்டணியில் செய்து வரும் சனாதன விரோத அரசியலை மக்களுக்கு அம்பலப் படுத்தி இருக்கிறார்.

தங்களின் சுயநலம் பணம் அதிகாரம் செல்வாக்கு என்ற தேவைகள் ஆட்சி அதிகாரத்திற்காக இந்த மண்ணின் தர்மத்தையும் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் பின்பற்றும் சனாதன தர்மத்தையும் கூட எதிர்க்கவும் பழிக்கவும் தயங்காதவர்கள். இவர்களின் அரசியலுக்காகவும் ஆட்சி அதிகாரத்திற்காகவும் மண்ணின் தர்மத்தை மட்டும் அல்ல. சனாதனத்தின் வழியில் வாழும் மக்களையும் தேசத்தையும் கூட பழிக்கவோ பலி கொடுக்கவோ தயங்காதவர்கள். ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி சார்ந்தவர்கள் என்பதை அவர்களின் ஒவ்வொரு அரசியல் நகர்வும் கூட்டணி கட்சிக்காரர்களின் தனிப்பட்ட அரசியல் நகர்வுகளும் தினம் தோறும் மெய்ப்பித்து வருகிறது. இவர்களின் சனாதன எதிர்ப்பு அரசியலையும் அனைவரும் ஒன்றிணைந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் திட்டமிட்டு செயல்படுவதையும் பிரதமர் மோடி பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார். சனாதன எதிர்ப்பு என்று அகம்பாவத்தால் ஆட்சி அதிகார வெறி அதிகார கொள்ளை வெறி பிடித்து மத துவேஷம் செய்து தர்மத்தையும் அதன் வழியில் வாழும் மக்களையும் பழிப்பதையே முழு நேர தொழிலாகக் கொண்ட ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியில் இருப்பவர்களிடமிருந்து மிகவும் விழிப்போடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். என்று சனாதன மக்களையும் சனாதன நிலைப்பாட்டில் இருந்து அரசியல் செய்யும் கட்சிகள் – அமைப்பினரையும் பிரதமர் மோடி எச்சரிக்கை செய்திருக்கிறார்.


Share it if you like it