இணையத்தில் வைரலாகும் ‘சங்கி கூட்டம்’ பாடல்!

இணையத்தில் வைரலாகும் ‘சங்கி கூட்டம்’ பாடல்!

Share it if you like it

கடந்த இரு தினங்களாக சங்கி கூட்டம் என்கிற பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹிந்துக்களுக்கு எதிராக திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சமூக வலைத்தளங்களில் கம்பு சுத்தி வருகின்றன. கருப்பர் கூட்டம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை வைத்துக் கொண்டு ஹிந்துக்களுக்கு எதிராக இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஹிந்துக் கடவுள்களை ஆபாசமாக விமர்சிப்பது, ஹிந்து மதகுருக்களை வசைபாடுவது என இவர்களது தொல்லை நாளுக்குநாள் எல்லை மீறி வருகிறது.

இந்த சூழலில், சிலர் ஹிந்துக்களுக்கு ஆதரவாக அவ்வப்போது இணையத்தில் கருத்து மற்றும் பாடல்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், சங்கிக் கூட்டம் என்கிற தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “வாழ்க்கையோட தத்துவத்தை ரெண்டடியில் வச்சு செஞ்ச வள்ளுவனும் எங்களோட சங்கிக் கூட்டம்டா…” என்ற வரியுடன் தொடங்கும் பாடல், ‘நெத்தியில திருநீறும் நெஞ்சத்துல குங்குமத்த வைக்கும் கூட்டம் எங்க சங்கிக் கூட்டம்டா… சத்தியத்த காத்து நின்னு சரித்திரத்தில் இடம்புடிச்ச சத்ரபதி மகராஜ் எங்க சங்கிக் கூட்டம்டா… சங்கி கூட்டம் எங்க சங்கி கூட்டம்… சங்கி கூட்டம் நாங்க சங்கி கூட்டம்” என்று தொடர்கிறது.

இப்பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடல் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


Share it if you like it