சந்தி சிரிக்கும் திராவிட மாடல் அரசின் போலி சமூகநீதி – வானதி சீனிவாசன் ஆவேசம் !

சந்தி சிரிக்கும் திராவிட மாடல் அரசின் போலி சமூகநீதி – வானதி சீனிவாசன் ஆவேசம் !

Share it if you like it

பட்டிலில் மாடுகளை அடைத்து வைப்பதுபோல் ஒரு சிறிய வீட்டில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மாணவிகளை மாணவியர் விடுதி என்கிற பெயரில் அடைத்து வைத்திருக்கும் அவலம் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது. இதற்கு கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசை விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

சிவகாசியில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மாணவிகளை உள்ளடக்கிய “தமிழக அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதி”, அம்மாவட்டத்திலுள்ள சாட்சியாபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் இயங்கி வருவது இந்த திராவிட மாடல் அரசின் போலி சமூகநீதி வேடத்தை தோலுரித்துக் காட்டுகிறது.

ஒரே வீட்டில் அடைந்து கிடக்கும் இம்மாணவிகள், போதிய கழிவறையின்மை, படுத்து உறங்க முடியாத இக்கட்டான அறைகள், தங்கள் உடைமைகளை வைப்பதற்கு கூட இடமில்லாமை போன்ற அடிப்படை வசதிகளின்றி தவித்து, “ஆடு மாடுங்க கூட இருக்க முடியாத இடத்தில் நாங்க இருக்கோம்” என்று புலம்புவதைக் கேட்கையில் பரிதாபமாக உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரான திருமதி. கயல்விழி அவர்களே, உங்கள் துறையில் இத்தனை அவலங்கள் நடக்கையில், நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள் ?

வார்த்தைக்கு வார்த்தை “நாங்கள் சமூகநீதிக் கட்சி” என்று கூறிக் கொள்ளும் தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களே, ஆதிதிராவிட மாணவிகளுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதி உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ?

“ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்” என்று நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை ?

எனவே, சிவகாசியில் குறுகிய வாடகை வீட்டில் அடிப்படை வசதிகளின்றி செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியை, போதுமான அடிப்படை வசதிகள் கொண்ட மற்றொரு அரசு கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்து, அம்மாணவிகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யுமாறு தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it