அனுமன் யாத்திரையில் கற்களை வீசிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்!

அனுமன் யாத்திரையில் கற்களை வீசிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்!

Share it if you like it

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஹிந்துக்கள் நடத்திய அனுமன் யாத்திரை மீது இஸ்லாமியர்கள் கற்களை வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதம் முழுவதும் ஏப்ரல் 16-ம் தேதி ஹனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஊர்வலங்களும் நடந்தன. அந்த வகையில், டெல்லியிலும் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. ஜஹாங்கிர்புரியில் நடந்த ஊர்வலத்தின்போது அப்பகுதியிலிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள், ஹிந்துக்கள் மீது கற்களை வீசி தாக்குதல்களை நிகழ்த்தினர். இது தவிர, துப்பாக்கியாலும் சுட்டனர். இதில், ஏராளமான ஹிந்துக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இத்தாக்குதலில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஹனுமான் ஷோபா யாத்திரை நடைபெற்றுள்ளது. அப்பொழுது, அந்த ஊர்வலத்தின் மீது கற்களையும், பீர் பாட்டில்களையும் மசூதியில் இருந்து அடிப்படைவாதிகள் வீசியுள்ளதாக பா.ஜ.க தேசிய செயலாளர் சத்ய குமார் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், ஹிந்துக்கள் சென்ற ஊர்வலத்தை பார்த்து ஆபாசமான செய்கையின் மூலம் தங்களது வன்மத்தை அடிப்படைவாதிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த, காணொளியையும் தனது கடும் கண்டனத்தையும் பா.ஜ.க செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தி.மு.க ஆட்சியில் எப்படி ஹிந்துக்கள் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ, அதே போன்று ஜெகன் மோகன் ஆட்சியிலும் ஹிந்துக்கள் உரிமைகள் நசுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்ய குமார் லிங்க் இதோ.


Share it if you like it

One thought on “அனுமன் யாத்திரையில் கற்களை வீசிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்!

  1. The riot reflects the inefficiency governonce of the government.The hindu people are the scape goats.

Comments are closed.