சவூதி அரேபியாவில் நடந்த அகழ்வாராய்ச்சியில் 8,000 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோயில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதின் மூலம், அரபு நாடுகளில் ஆரம்பத்தில் ஹிந்துக்கள்தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது நிரூபணமாகி இருக்கிறது.
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள அல்ஃபா என்ற இடத்தில் தொல்பொருள் திணைக்களம் அகழாய்வு செய்து வருகிறது. இந்த அகழாய்வில்தான் சுமார் 8,000 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோயில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலுடன், ஒரு யாக பீடமும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த யாக பீடம் இந்திய கோயில்களில் உள்ள அதே திசையில் இருக்கிறது. தவிர, பல நினைவுச் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதில் கடவுள் மற்றும் தெய்வங்களின் படங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் சவூதி அரேபியாவில் ஹிந்து நாகரிகமும், ஹிந்து மதமும் ஆரம்ப காலத்தில் இருந்தது என்பது தெளிவாகிறது.
சவுதி அரேபிய பாரம்பரிய ஆணையத்தின் ஊடக அறிக்கையின்படி, சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் அமைப்பு ரியாத்தில் அகழாய்வு செய்து வருகிறது. இங்கு மனித குடியேற்றத்தின் எச்சங்கள் மற்றும் 1,807 புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறது. மேலும், கண்டுபிடிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் ஒரு காலத்தில் மனித குடியிருப்பு இருந்ததைக் காட்டுகின்றன. கோயிலும் பலிபீடமும் ஹிந்து நாகரீகத்தை பறைசாற்றுகின்றன. அல்ஃபாவில் வசித்த மக்கள் இக்கோயிலில் வழிபடுவதோடு, பலியிடும் சடங்குகளையும் செய்து வந்திருக்கின்றனர் என்று நம்பப்படுகிறது.
தவிர, பாலைவனத்திலும் தண்ணீரை சேமிக்க மக்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இவர்கள் பாசனத்திற்காக கால்வாய்கள், குளங்கள் மற்றும் குழிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். மழைநீரும் வயல்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கற்களில் உள்ள கல்வெட்டுகளில் மாதேகர் பின்முனைம் என்ற நபர் குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வரலாறு தொடர்பான புதிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.