இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்த சம்பவம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுக்கும் வகையில், ஈரான் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விஷம் வைத்து கொல்ல முயன்ற சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது, கடந்த நவம்பர் மாதம் முதல், பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மாணவிகள் பலர், பள்ளி வளாகங்களில் வீசிய துர்நாற்றங்களால் வாந்தி, மூச்சுத் திணறல், தலைவலி, உள்ளிட்ட பிரச்சனைகளை அனுபவித்து இருக்கின்றனர்.
இதையடுத்து, பள்ளி மாணவிகள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பெண் கல்விக்கு எதிரான நபர்கள் மாணவிகளை கொல்ல இந்த இழிச்செயலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்தவகையில், 5,000 மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.