ஹிந்து தெய்வங்களை இழிவுப்படுத்திய (SDPI, PFI,) கண்டித்த 22 வயது இளைஞரை படுகொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள்..!

ஹிந்து தெய்வங்களை இழிவுப்படுத்திய (SDPI, PFI,) கண்டித்த 22 வயது இளைஞரை படுகொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள்..!

Share it if you like it

கேரள மாநிலம் அலபுழாவை சேர்ந்தவர் நந்து ஆர். கிருஷ்ணா.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த இவரை. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ கட்சியை சேர்ந்தவர்கள் நந்துவின் மீது மிருக தனமான தாக்குதலை நிகழ்த்தி  உள்ளனர்.

வாள்களை கொண்டு நந்துவின் கழுத்தில் ஆழமாக வெட்டியுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். தற்பொழுது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆலபுழா மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்  மற்றொரு ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளரும் பலத்த காயமடைந்து உள்ளார். அவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கைகள் வாள்களை கொண்டு வெட்டப்பட்டன. 22 வயதான நந்து அவரது பெற்றோருக்கு  ஒரே மகன் ஆவார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ-பி, எஃப்.ஐ.யைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கடந்த சில நாட்களாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வயலாரில் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்தனர். இந்து மதத்தை இழிவுப்படுத்துவது, இந்து சின்னங்களுக்கு எதிராக கேவலமான கருத்துக்களை பேசியுள்ளனர்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இச்செயலை கண்டிக்கும் விதமாக  நாகங்குலங்க்ரா சந்திப்பில் ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நந்துவும் மற்றொரு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியும் அந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்த அணிவகுப்பின் போது எஸ்.டி.பி.ஐ- மற்றும் பி.எஃப்.ஐ-வை சேர்ந்தவர்கள் கற்களை வீசி வன்முறையை உருவாக்கி உள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பதற்றத்தைத் தணிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டனர். இந்த கோரிக்கையை ஏற்று கொண்டு  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கலைந்து செல்ல முற்பட்டனர்.

ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் கலைந்து செல்லத் தயாராக இல்லை.  அப்பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் மண்டல் செயல்பாட்டாளரின் வீட்டை குறி வைத்து தாக்கியுள்ளனர். அதன் பின்பு அருகில் உள்ள மசூதியில் இருந்து கொடிய ஆயுதங்களை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனை கொண்டு நந்து உட்பட மற்றொருவர் மீது மிக கடுமையாக தாக்கியுள்ளனர். இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல் என்பதை இது மிக தெளிவாகக் காட்டுகிறது.

எஸ்.டி.பி.ஐ  மற்றும் பி.எஃப்.ஐ இப்பகுதியில் சிக்கல்களை உருவாக்குவது இது முதல் முறை அல்ல. சபரிமலை போராட்டத்தின் போது எஸ்.டி.பி.ஐ மற்றும் பிஎஃப்.ஐயை சேர்ந்தவர்கள் ஜயப்ப பக்தர்களின் ஊர்வலத்தைத் தாக்க முயன்றுள்ளனர்.

பி.எஃப்.ஐ கட்சியை சேர்ந்தவர்கள் அருகில் இருந்த சந்துரூர்  மசூதியில் இருந்து வாள் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்  காவல்துறை மேற்கொள்ளவில்லை. இந்த பகுதியின் பி.எஃப்.ஐ கட்சியினருக்கு., சிபிஐஎம் கட்சியை சேர்ந்த எம்.பி. மறைமுக ஆதரவை வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் இந்தக் கொலையைக் கண்டித்து, யு.டி.எஃப் மற்றும் எல்.டி.எஃப் இருவரும் மாநிலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளை வளர்த்து வருவதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it