ஹிந்து கோவில் ஒன்றை திமுக பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்ததை நீதிமன்றம் மூலமாக மீட்டுள்ளதாக இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகரில் எஸ்.எஸ்.எஸ் கோவில் தெருவில் இருக்கும் செல்வ விநாயகர் ஆலயம் மிகவும் பழமையானது. அந்த ஆலயத்தை சில ஆண்டுகளாக திமுக பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்ததை நீதிமன்ற மூலமாக மீட்டெடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர்.
இதைப் பொறுக்க முடியாத அந்த நபர் சில வாரங்களுக்கு முன்பு தமிழக அமைச்சரிடம் புகார் செய்து அவர் தூண்டுதல் பேரில் வட்டாட்சியர் பூட்டி சீல் வைத்துவிட்டனர். சுவாமிக்கு தினசரி வழிபாடு தடை ஏற்பட்டதை கண்டு அனைவருக்கும் மனு அனுப்பி எந்தவித பயனும் இல்லாததால் அனைவரும் சேர்ந்து கற்பூரமேற்றி போராட்டம் நடத்தினர். அப்போதும் அரசும், தேர்தல் அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால் இன்று தேர்தல் ஆணையத்தினரிடம் பொதுமக்கள் தங்களுடைய குடும்ப அட்டையையும் ஆதார் அட்டையும் சமர்ப்பித்து, தங்களுடைய மனக்குமுறலை தெரிவிக்க வந்திருந்திருந்தனர்…
ஆனால் தேர்தல் ஆணைய அதிகாரி மனுவை பெற்றுக் கொண்டு ஓரிரு நாட்களில் முடிவெடுப்பதாக அறிவித்ததன் பேரில் திரும்பிச் சென்றனர்…
https://x.com/hindumunnani_tn/status/1779863179549442275