இது என்னடா புது புரளியா இருக்கு..!

இது என்னடா புது புரளியா இருக்கு..!

Share it if you like it

தீவிரவாதத்தை மிகைப்படுத்தி பேசுதல், விலங்குகளை கொடூரமாக கொல்வது, மக்களிடையே பிரிவினையை தூண்டுவது, ஆபாசமான காட்சிகளை வெளிப்படுத்துவது. பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது. கற்பழிப்பு போன்ற காட்சிகளை வெளிப்படுத்துவது. லவ் ஜிஹாத், ஆசிட் தாக்குதல்கள், மற்றும் பல குற்றச்செயல்கள் டிக் டாக் மூலம் நிகழ்ந்த வண்ணம் இருந்தது.

டிக்டாக் செயலியை இந்தியாவில் தடை செய்யா விட்டால். பல இளைஞர்கள், குழந்தைகள், வருங்காலத்தில் தவறான வழியில் செல்ல நேரிடும் என்று பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், பலர் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை முன் வைத்தனர். என்பது அனைவரும் அறிந்ததே., மேலும் டிக்டாக்கில் தனது வீடியோவிற்கு அதிக லைக்குகள் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களும் இதில் அடங்குவர் என்பது நிதர்சனம்.

இந்திய எல்லைக்குள் அத்தூமீறி 20-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் இறப்பிற்க்கு காரணமான சீனாவிற்கு கடும் எதிர்ப்பினை தெரிவிக்கும் பொருட்டு மத்திய அரசு சீன செயலிகள் உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. அதில் டிக் டாக் செயலியும் ஒன்று, உண்மை இவ்வாறு இருக்க.

டிக் டாக்கில் என்னை ஏழரை கோடி பேர் பின்பற்றுகிறார்கள். எல்லோரும் இளம் பிள்ளைகள், பள்ளி, கல்லூரிகளில் படித்து கொண்டு இருப்பவர்கள். அவர்கள் என் பேச்சை எடுத்து டிக் டாக்கில் போடுகின்றனர். அதனாலேயே டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதாக சீமான் கூறிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it