காவல்துறைக்கு ரகசிய தகவல் கொடுத்தவர் வெட்டிக்கொலை!

காவல்துறைக்கு ரகசிய தகவல் கொடுத்தவர் வெட்டிக்கொலை!

Share it if you like it

ரேஷன் அரசி கடத்தப்படுவதாக காவல்துறையில் புகார் தெரிவித்த நபரை மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ராஜா நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி வயது 63. இவர், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் (எடையாளராக) பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வெளியே சென்று விட்டு மீண்டும் தனது சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது, வீடு இருக்கும் தெரு அருகே வந்த அவரை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட குழு ஒன்று வெங்கடாசலபதியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது. இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட பின்னரே, அந்த பகீர் தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அது என்னவெனில், ரேஷன் கடையில் தொடர்ச்சியாக நிகழும் அரிசி கடத்தல் குறித்து காவல்துறையினருக்கு ரகசியமாக வெங்கடாசலபதி தகவல் கொடுத்துள்ளார். இதைபொறுத்துக்கொள்ள முடியாத அந்த கும்பலை சேர்ந்தவர்கள், இந்த கொடூர படுகொலையை நிகழ்த்தி இருப்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தரமற்ற பொங்கல் பரிசு பொருட்களை வழங்கிய தி.மு.க மீது பொதுமக்கள் கடும் கோவத்தில் இருந்து வருகின்றனர். இச்சூழலில், காவல்துறைக்கு ரகசிய தகவல் கொடுத்தவருக்கே இந்த நிலைமையா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கண்ட்ரோலில் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில், இந்த சம்பவம் சிறந்த உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பெண் காவலர்களுக்கே தி.மு.க ஆட்சியில் போதிய பாதுகாப்பு இல்லாத சூழலில் காவல்துறையை நம்பியவருக்கு இந்த கதி என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு மோசமடைந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it