’ஜ.பேக்’நிறுவனம் மூன்று விதமான அறிக்கைகளை ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையிலேயே தி.மு.க தலைமை தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
- தி.மு.க-விற்கு ஆதரவாக உள்ள தொகுதிகள்.
- தி.மு.க-விற்கு கடும் போட்டியை உருவாக்கும் தொகுதிகள்.
- தி.மு.க-விற்கு நிச்சயம் தோல்வியை தரும் தொகுதிகள்.
தோல்வியை தரும் தொகுதிகளை தி.மு.க அடையாளம் கண்டு. தி.மு.க தனது கூட்டணி கட்சி தோழர்களுக்கு வழங்கியுள்ளது. அதில் ஒரு தொகுதியாக பார்க்கப்படுவது தான் ’காரைக்குடி தொகுதி’. இத்தொகுதியில் தான் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா போட்டியிடுகிறார்.
சிவகங்கை தொகுதியில், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால். அந்த தொகுதியை தி.மு.க எடுத்துக்கொண்டு. காங்கிரஸ் கட்சி கேட்காத தொகுதியான காரைக்குடியை, அக்கட்சியிடம் தள்ளியுள்ளது.
’ஜ_பேக்’ நிறுவனத்தின் சூழ்ச்சியை மோப்பம் பிடித்த காங்கிரஸ். தி.மு.க தலைமை மீது தற்பொழுது கடும் கொதிப்பில் உள்ளது. தோல்வி அடையும் காரைக்குடி தொகுதியை வழங்கியதால்., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தேர்தல் பணி செய்யாமல் மெத்தனம் காட்ட துவங்கியுள்ளனர்.
அதே போல் சிவகங்கை தொகுதியிலும் தி.மு.க-விற்கு தேர்தல் பணி செய்யாமல். காங்கிரஸ் கட்சி தோழர்கள் சுணக்கம் காட்ட துவங்கி இருப்பது. தி.மு.க கூட்டணி கட்சியின் தலைவர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மீடியான் இணையதள ஊடகத்திற்கு நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையிலேயே இந்த செய்தி வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.