சர்ச்சுகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. மசூதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், இந்து கோயில்கள் மட்டும் ஏன்? அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என தெலுங்கு திரை உலக சூப்பர் ஸ்டார் கேள்வி எழுப்பியுள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
இந்தியாவிலேயே அதிக ஆலயங்களை கொண்டுள்ள மாநிலங்களில் தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது. ஆனால், தி.மு.க ஆட்சியில் ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, பண்பாடு, கலாச்சாரம் தற்பொழுது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. கிரிப்டோ கிறிஸ்தவர்கள் மற்றும் இறைமறுப்பாளர்கள் ஹிந்து ஆலயங்களை, விட்டு உடனே வெளியேற வேண்டும், என தமிழகம் முழுவதும் தொடர்ந்து குரல்கள் ஒலித்து வருகின்றன.
தமிழ் கலாச்சாரத்தின் இதயமாகவும், பக்தியின் மையமாகவும் கலைகள், மொழி போன்றவற்றின் பிறப்பிடமாகவும் விளங்கும் கோவில்கள் இப்படி அழிந்து வருவதை பார்க்கும் போது இதயம் வலி கொள்கிறது. ஆயிரக்கணக்கான கோவில்கள், எவ்வித பராமரிப்பும் இன்றி அழிந்து வருகின்றன. எனவே, இக்கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, விடுவிக்க வேண்டிய தருணமிது. எந்த சமூகமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் சமூகத்தின், சொந்த வழிபாட்டு தலங்களை, அவர்களே நிர்வகிக்க வேண்டும். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டு கோவில்களை, அரசு பிடியில் இருந்து விடுவிப்போம் வாருங்கள், என்று ஈஷா மைய நிறுவனர் சத்குரு சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதே போன்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோவில்கள் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டுமா? என்று அண்மையில் கேள்வி எழுப்பி இருந்தது. “நான் ஆன்மீக யாத்திரைகளுக்கு சென்று வருகிறேன். நம் புனித ஸ்தலங்களில் நடக்கும் இதயமற்ற சுரண்டல்களை பார்த்து என் இதயம் ரத்தம் சிந்துகிறது. மற்ற வழிப்பாட்டு தலங்களை போல் நம் கோவில்களும் விடுதலை பெற வேண்டும். சத்குரு இதற்கு குரல் கொடுத்துள்ளார். நம் நம்பிக்கைகளை மீட்க நாம் அனைவரும் ஒரே குரலில் ஒன்றிணைய வேண்டும்” என்று பிரபல நடிகை கஸ்தூரி குரல் கொடுத்து இருந்தார். அந்த வகையில், சர்ச்சுகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை, மசூதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், இந்து கோயில்கள் மட்டும் ஏன்? அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என பவன் கல்யாண் கேள்வி எழுப்பி இருக்கும் காணொளி தற்பொழுது வைரலாக துவங்கியுள்ளது.
பவன் கல்யாண் பேசிய லிங்க் இதோ