சீனாவின் மேலும் 54 ஆப்களுக்கு தடை?!

சீனாவின் மேலும் 54 ஆப்களுக்கு தடை?!

Share it if you like it

நாட்டின் பாதுகாப்புக் கருதி சீனாவின் மேலும் 54 ஆப்களை இந்தியா தடை செய்ய முடிவு செய்திருக்கிறது.

இந்திய – சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் கடந்தாண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இத்தாக்குதலுக்கு காரணமாக, சீன நாட்டின் மொபைல் ஆப்கள், பயனாளிகளின் தரவுகளை திருடி சீனா போன்ற வெளி நாடுகளுக்கு அனுப்புவதாக, மத்திய உளவுப்பிரிவு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.

இதையடுத்து, நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்த சமூக வலைத்தளங்களங்களி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த சீன நாட்டின் டிக் டாக், வீசாட், ஹலோ, ஷேர் இட், யு.சி. பிரவுஸ்சர் உள்ளிட்ட 59 மொபைல் ஆப்களுக்கு இந்தியா தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீனாவின் மேலும் 118 மொபைல் ஆப்களுக்கு இந்தியா தடை விதித்தது. பின்னர், நவம்பர் மாதம் 3-வது லிஸ்ட்டில் 43 சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், தற்போது 4-வது கட்டமாக 54 சீன மொபைல் ஆப்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த லிஸ்ட்டில், பியூட்டி கேமரா, செல்பி கேமரா, ஸ்வீட் செல்பி ஹெச்.டி., ஈக்வலைசர் & பேஸ் பூஸ்டர், விவா வீடியோ எடிட்டர் உள்ளிட்ட பிரபலமான ஆப்கள் அடங்கும். ஆகவே, தடை செய்யவதற்கு முன்பாக மேற்படி ஆப்களை பிளாக் செய்யுமாறு ஆப் மற்றும் ப்ளே ஸ்டோருக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இவ்வாறு, சீன ஆப்கள் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருவதால், அந்நாடு கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. காரணம், மேற்கண்ட மொபைல் ஆப்கள் யாவும் பிரபலமாக கம்பெனிகளின் உருவாக்கம் என்பது ஒருபுறம், இன்னொருபுறம் இனி இந்தியர்களின் நடவடிக்கையை கண்காணிக்க முடியாதே என்கிற விரக்தி. இதேபோல, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவின் அனைத்து மொபைல் ஆப்களையும், தடை செய்வதோடு, சீனாவின் பொருட்களையும் தடை செய்ய வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த இந்தியர்களின் கருத்தாக இருக்கிறது.


Share it if you like it