அதா சர்மாவின் பக்குவம் கூட தற்குறி சீமானுக்கு இல்லையே!

அதா சர்மாவின் பக்குவம் கூட தற்குறி சீமானுக்கு இல்லையே!

Share it if you like it

“தி கேரளா ஸ்டோரி ” திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு இருக்கும் பக்குவம் கூட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இல்லையே என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘இது நம்ம ஆளு’, சார்லி சாப்ளின்-2  படங்களில் நடித்து புகழ் பெற்றவர் அதா சர்மா. இவர், அண்மையில் நடித்து வெளிவந்த திரைப்படம் ‘செல்பி’. அந்தவகையில், இவர் நடித்து சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்த படம்தான் தற்போது நாடு முழுவதும் பேசுப்பொருளாக மாறியிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், அதா சர்மா கூறியதாவது ; “கேரளா ஸ்டோரி படத்தில் நடிப்பதற்கு முன்பு இயக்குனரின் ஏற்பாட்டின் பேரில் கதையில் குறிப்பிடப்படும் பெண்களை நேரில் சந்தித்து அவர்கள் அனுபவித்த கொடுமைகளை கேட்டறிந்தேன். அழகான குடும்பங்களில் இருந்து ஆபத்தான இடங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட கதையை கேட்டு கலங்கினேன்.

படம் பற்றி வரும் புகார்களையும், விமர்சனங்களையும் நான் அறிவேன்.  2 – நிமிட டிரைலரை பார்த்து விட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம். இரண்டு மணி நேர படத்தை பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள். இந்த படத்தில் நடித்தற்காக கேரளாவை சேர்ந்த பெண்கள் கூட எனக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த படம் அரசியல் பேசவில்லை. மதவாதம் பேசவில்லை. பயங்கரவாத த்யைமுஃ, மனிதநேயத்தையும் பேசுகிறது. கருத்து சுதந்திரம் உள்ள நாட்டில் விமர்சனங்களை வரவேற்பேம் என கூறியுள்ளார். நடிகை அதா சர்மாவிற்கு இருக்கும் பக்குவம், தேசவிரோதி யாசின் மாலிக் நண்பனுக்கு எப்படி இருக்கும் என நெட்டிசன்கள் சீமானை விமர்சனம் செய்து வருகின்றனர்.


Share it if you like it