பத்திரிகையாளர்களிடம் கண்ணியமாக நாம் பேச வேண்டும் என சீமான் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தனது கட்சி அலுவலகமான கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, புதிய தலைமுறை ஊடக நெறியாளரின் போலி முகத்திரையை நாட்டு மக்களிடம் அம்பலப்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து, அண்ணாமலையின் நியாயமான கோவத்தை பலர் பாராட்டி இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நிருபர்கள் அணாமலை குறித்து எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார் ;
தம்பி அண்ணாமலை ஒரு போலீஸ் அதிகாரி. சிறு வயதில் இருந்து அரசியல் செய்து பக்குவப்பட்டு வந்த தலைவர் அல்ல. நான், திராவிடர் கழகம், பெரியார் கழகம், அம்பேத்கார் இயக்கம், மார்க்சிய சிந்தனை போன்ற எல்லா இயக்கங்களில் ஊறியவன். பல்வேறு, அரசியல் இயக்கங்களில் இருந்து வளர்ந்து வந்த பிள்ளை நான்.
போலீஸ் அதிகாரியாக இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்தவர் அண்ணாமலை. அதனால், எப்படி? பேச வேண்டும் என அவருக்கு தெரியவில்லை என பேசியிருக்கிறார்.
தி.மு.க.வின் அடிவருடி பத்திரிகையாளர்களிடம் மட்டுமே தனது நியாயமான கோவத்தை பா.ஜ.க. தலைவர் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களிடம் எவ்வாறு பேசியுள்ளார் என்பதற்கு அவரது காணொளியே சிறந்த உதாரணம். இவர், எல்லாம் பா.ஜ.க. தலைவருக்கு அறிவுரை வழங்குவதாக என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் சீமானை சீண்டி வருகின்றனர்.