தமிழ் தேசியமும் மதமாற்ற குரூப்பும் ஒன்றா?

தமிழ் தேசியமும் மதமாற்ற குரூப்பும் ஒன்றா?

Share it if you like it

ஹிந்துக்களை எப்படி மூளை சலவை செய்ய வேண்டும் என பெண் கிறிஸ்தவ மதபோதகர் பேசிய கருத்தும், சீமானின் கருத்தும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைபாளராக இருப்பவர் சீமான். இவர், ஒரு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, சீமானின் மிக நெருங்கிய கூட்டாளியும், நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளருமாக இருப்பவர் திரைப்பட இயக்குனர் களஞ்சியம். இவர், அண்மையில் பிரபல ஊடகமான சத்தியம் டிவிக்கு அளித்த பேட்டியில், சீமான் ஒரு கிறிஸ்தவர் தான். அவர், எப்போதுமே ஒரு கிறிஸ்தவர் தான். அவரது, மனைவி மற்றும் தம்பி என ஒட்டு மொத்த குடும்பமே ஒரு கிறிஸ்தவ குடும்பம் என குறிப்பிட்டு இருக்கிறார். நான் வீர சைவன் என்று மேடைதோறும் பேசி வந்த சீமானின் உண்மை முகம் களஞ்சியத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு அம்பலமாகி இருந்தது.

கிரிப்டோ கிறிஸ்தவராக இருந்து கொண்டு, ஹிந்துக்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் சீமான் என பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் குரல் கொடுத்து வந்தன. இதற்கு மத்தியில், தமிழ் கடவுள் முருகனை தீவிரவாதி என்றும் சிவன் மற்றும் பார்வதி தேவியை மிகவும் தரக்குறைவாக இதே சீமான் விமர்சனம் செய்து இருந்தார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

இதனிடையே, ஹிந்துக்களை எப்படி? மூளை சலவை செய்து கிறிஸ்தவர்களாக மாற்ற வேண்டும். அதன்பின், இந்தியாவை எப்படி? கிறிஸ்தவ நாடாக மாற்றலாம் என பெண் கிறிஸ்தவ மதபோதகர் பேசுவதும், நாம் தமிழ் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்தும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹிந்துக்களிடையே பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் நாட்டை பிடிக்க துடிக்கும் கிறிஸ்தவ மிஷநரிகளின் கைக்கூலி தான் இந்த சீமான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it