தமிழன் திராவிடன் ஆனது எப்படி? இதாங்க காரணம்!

தமிழன் திராவிடன் ஆனது எப்படி? இதாங்க காரணம்!

Share it if you like it

தமிழ் மாடல் என்று சொல்லாமல் திராவிட மாடல் என்று சொல்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஒரு பெண்மணி புட்டுப்புட்டு வைத்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஈரோடு வெங்கட ராமசாமியால் ஆரம்பிக்கப்பட்டதுதான் திராவிடர் கழகம். இக்கழகத்தை அவர் ஆரம்பிக்கும்போதே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதாக சொல்வதுண்டு. காரணம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதுதான் திராவிட நாடு என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுவதுண்டு. அப்படியிருக்க, தமிழ்நாட்டில் மட்டும் திராவிடர் கழகம் என்று ஆரம்பிக்க வேண்டிய காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் உண்டு. அதேபோல, ராமசாமி தனது சுயநலத்துக்காகவே இப்படியொரு அமைப்பைத் தொடங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு.

இது இப்படி இருக்க, தமிழகத்தில் தற்போது ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க., எதற்கெடுத்தாலும் திராவிட மாடல், திராவிட மாடல் ஆட்சி என்று கூறிவருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழக மாடல் என்று சொல்லாமல் திராவிட மாடல் என்று சொல்வது ஏன்? தமிழனை தமிழன் என்று சொல்லாமல் திராவிடன் என்று சொல்வது ஏன்? கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை அடங்கியதுதானே திராவிட நாடு என்று சொல்கிறீர்கள்.

ஆனால், கர்நாடகாகாரர்கள் கன்னட மொழி பேசுவதால் தங்களை கன்னடர்கள் என்றுதான் அழைக்கிறார்கள். அதேபோல, ஆந்திரா மற்றும் தெலங்கானாகாரர்கள் தெலுங்கு பேசுவதால் தங்களை தெலுங்கர்கள் என்றுதான் அழைக்கிறார்கள். கேரள மக்களோ மலையாளம் பேசுவதால் தங்களை மலையாளிகள் என்று அழைக்கிறார்கள். அப்படி இருக்க, தமிழ் பேசும் தமிழனை மட்டும் தமிழன் என்று அழைக்காமல் திராவிடன் என்று அழைப்பது ஏன்? இது யாரது சூழ்ச்சி என்று தமிழர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில்தான், தமிழகத்தை திராவிடமாக்கியதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஒரு பெண்மணி புட்டுப்புட்டு வைத்திருக்கிறார். ஈரோடு ராமசாமி கன்னடிகா பலிஜா நாயுடு. அதேபோல, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தெலுங்கர்கள்தான். தவிர, மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோதும் சரி, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்ற பிறகும் சரி, தமிழகத்தில் முதல்வராக இருந்தவர்களில் அதிகம் பேர் தமிழர்களே கிடையாது. அண்ணாதுரையின் தந்தை முதலியாராக இருந்தாலும், தாய் வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர். அதேபோல, கருணாநிதி ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கர். எம்.ஜி.ஆர். இலங்கையில் பிறந்த கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மலையாளி. ஜெயலலிதா பிராமணராக இருந்தாலும், இவரது பூர்வீகம் கர்நாடகா.

அது மட்டுல்ல, தமிழகத்தில் தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க.வில் முதல்வராக இருக்கும் ஸ்டாலின் முதல் பவர்புல் அமைச்சர்களாக வலம்வரும் எ.வ.வேலு, கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஆர்.காந்தி, சேகர்பாபு வரை பலரும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான். அப்படி இருக்க, இவர்களால் எப்படி தமிழ் தமிழக மாடல் என்று கொண்டாட முடியும். அதனால்தான், திராவிடம், திராவிடன், திராவிட மாடல் என்று கூறிவருகிறார்கள்” என்று தோலுரித்துக் காட்டி இருக்கிறார்கள். ஆகவே, தமிழை தாய் மொழியாகக் கொண்ட தமிழர்கள்தான் விழித்துக் கொள்ள வேண்டும்.


Share it if you like it