அண்ணாமலை கேட்டதில் என்ன தப்பு… தி.மு.க.வை பங்கம் செய்த சீமான்!

அண்ணாமலை கேட்டதில் என்ன தப்பு… தி.மு.க.வை பங்கம் செய்த சீமான்!

Share it if you like it

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஏன்? வாழ்த்து தெரிவிக்கவில்லை என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேட்டதில் என்ன தவறு இருக்கிறது. என, தி.மு.க.வை வறுத்தெடுத்து இருக்கிறார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், அளந்து விடும் கதைகளை கேட்க தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இருப்பினும், சில நேரங்களில் இவர் கூறும் கருத்துக்கள் மக்களின் சிந்தனையை தூண்டும் வகையில் அமைவது உண்டு. இதனிடையே, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக முதல்வர் ஏன்? வாழ்த்து தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், தி.மு.க. தலைவராக இருக்கும் போது உங்கள் கொள்கைபடி நீங்கள் இருக்கலாம். ஆனால், தமிழக முதல்வர் என்ற முறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் பாகுபாடு காட்டுவது சரியா? என தனது எண்ணத்தை அறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்தி இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக முதல்வருக்கு அண்ணாமலை எழுப்பிய கேள்வி குறித்து கேட்கப்பட்டது. இதற்கு, சீமான் கூறியதாவது;

தி.மு.க.வில் 90% சதவீதம் ஹிந்துக்கள் இருப்பதாக தி.மு.க. தான் சொல்கிறது. அவர்கள், விழாவிற்கு முதல்வர் வாழ்த்து சொல்வது தானே சரியாக இருக்க முடியும். இஸ்லாமியர், கிறிஸ்தவர் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஏன்? வாழ்த்து சொல்லவில்லை. அந்த விழாவிற்கு வாழ்த்து சொல்லும் போது, இவர்களின் விழாவிற்கும் வாழ்த்து சொல்வது தானே முறை. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேட்டதில் எந்த தவறும் இல்லை என கூறியிருக்கிறார்.

இன்றைக்கு தான் மிக தெளிவாகவும், நியாயமான முறையில் சீமான் பேசி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.


Share it if you like it