சலங்கை ஒலி திரைப்படத்தை நானும், கமல் அப்பாவும் ஒன்றாக சேர்ந்து பார்த்தோம் என்று சீமான் கூறியிருப்பது நகைப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இயக்குனர், நடிகர், அரசியல் கட்சித் தலைவர் என பல்வேறு பரிணாமங்கள் எடுத்தவர் சீமான். அதேபோல, கதை சொல்லவதிலும் வல்லவர். அதேசமயம், அந்தக் கதை நிஜத்தில் நடந்ததுதானா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு இருக்கும் என்பதுதான் வேடிக்கை. சிறு வயதில் பெரிய பெரிய குத்துச்சண்டை வீரர்களை எல்லாம் வீழ்த்தியது, இந்தியாவிலேயே ஏ.கே.74 துப்பாக்கியைச் சுட்டது, தனது வீட்டுக் காக்காக்கள் நெய்ச்சோறு வைத்தால்தான் சாப்பிடும் என்று சொன்னது, இலங்கையில் பிரபாகரன் ஆமைக்கறி சமைத்துக் கொடுத்தது என அடுக்கிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில், தற்போது லேட்டஸ்ட்டாக புதிய கதை ஒன்றை சொல்லி இருக்கிறார். அந்தக் கதை வேறொன்றும் இல்லை, நடிகர் கமல் நடித்த சலங்கை ஒலி திரைப்படத்தை கமலின் தந்தை சீனிவாசனுடன் சேர்ந்து பார்த்தேன் என்பதுதான். இது மட்டுமா, எப்படி அந்த சந்திப்பு நடந்தது? இருவரும் எப்படி ஒன்றாக சினிமாவுக்குப் போனார்கள் என்பது குறித்தும் ஒரு குட்டிக் கதையை சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கேலி, கிண்டலுக்கும், நகைப்புக்கும் உள்ளாகி இருக்கிறுத. சீமான் இன்னும் என்னவெல்லாம் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.