மின்னல் போல் ஒளிரும் இயல்புடையவள் பெண். அதனாலேயே ‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்றார். பெண்மையை போற்றும் வகையில் நம் பாரத திருநாட்டில் உள்ள மலைகள் நதிகள் என அனைத்திற்கும் பெண்களின் பெயரை கொண்டே அழைத்திருப்போம். அனைத்திற்கும் மேலாக நமது நாட்டையே பாரதமாதா என்று தான் அழைப்போம்.
பெண்ணின் பெருமையை உலகிற்கு பறைசாற்றியதில் பாரதிக்கு பெரும் பங்குண்டு. பாண்டிச்சேரியில் தனித்திருந்த பாரதியார்,தேநீர் தயாரித்து அருந்த தடுமாறிய நிலையில் செல்லம்மாளை உணர்ந்தார், பெண்ணின் விடுதலைக்காக பாடினார். வேதநாயகம் பிள்ளை சுகுண சுந்தரியில் குழந்தை மணத்தை கண்டித்தார். பெண் கல்வி வளர்ந்தது. சமுதாயம் உயர்ந்தது. தொழில் பகுதி உயர்ந்தது, மகளிரும் தொழில் வாய்ப்பை பெற்றனர். மாதவையா, கல்கி போன்றவர்களைத் தொடர்ந்து பின் வந்தவர்களும் பெண்ணின் பெருமை பேசினர்.
பாரத அன்னை என்பது இந்தியாவின் ஒரு தாய் தெய்வம் . பாரத மாதா பொதுவாக சிவப்பு அல்லது காவி நிற புடவை அணிந்து தேசியக் கொடியை ஏந்தியவாறு சித்தரிக்கப்படுகிறார் ; அவள் சில சமயங்களில் தாமரை மீது நின்று சிங்கத்துடன் இருப்பாள்.
இந்நிலையில் புனிதமான நம் பாரத அன்னையை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மிக மோசமாக நாகூசும் வகையில் இழிவுபடுத்தி பேசியுள்ள காணொளியானது தற்போது இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு சீமான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கைது செய்ய வேண்டும் எனவும், மக்களை ஆளும் தகுதி இவருக்கு கொஞ்சம் கூட இல்லை என்று சீமான் கட்சியை முடக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
https://x.com/Aryabhata99/status/1766158854105014391?s=20