சேலம் பாத்திமா கிறிஸ்தவப் பள்ளியில் படித்த மாணவி சுகன்யா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் யார் என்பதை தமிழக காவல்துறை இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை என்று பிரபல அரசியல் விமர்சகர் செல்வகுமார் பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
அரியலூர் மாணவி லாவண்யா கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுப்புத் தெரிவித்து, தற்கொலைக்கு செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொதிப்பையும், கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் போதிய பாதுகாப்பை இல்லை என்கிற குற்றச்சாட்டு வந்த வண்ணம் உள்ளது. அவ்வளவு ஏன்? பெண் காவலர்கள் கூட தி.மு.க. ஆட்சியில் அச்சத்தில் உறைந்து போய் உள்ளதாக பொதுமக்களே குற்றம் சுமத்தும் நிலையில்தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிரபல அரசியல் விமர்சகர் செல்வகுமார், தி.மு.க. ஆட்சியில் சேலம் மாணவி சுகன்யாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தி.மு.க. ஆட்சியில் 2006 நவம்பர் 16-ம் தேதி, சேலம் பாத்திமா கிறிஸ்தவப் பள்ளியில் கற்பழித்து கொலை செய்யபட்ட 17 வயது பிளஸ் 2 மாணவி சுகன்யாவின் வழக்கை 15 வருடங்களாக தமிழக காவல்துறை விசாரித்தும் “யார் குற்றவாளி” என்பதை இன்றுவரை அடையாளம் காட்டவில்லை. மாணவி குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை கூறுகிறது. இதையேதான் பள்ளி நிர்வாகமும் சொல்லியது. ஆனால், அதற்கு ஆதாரமாக மாணவியின் மதிப்பெண் பட்டியலை காவல் துறை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எதற்காக “ஆணுரை, பீர் பாட்டில், சக்தி மாத்திரைகள்?” என்பதற்கும் பதில் இல்லை. இதே ட்ரஸ்ட்தான் தஞ்சாவூர் மைக்கேல்பட்டி பள்ளியையும் நடத்தி வருகிறது என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து, அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்திற்கு ஓடிய தி.மு.க., சேலம் மாணவி சுகன்யாவிற்கு மட்டும் நீதியை பெற்றுக் கொடுத்து விடுமா என்று மக்கள் கருத்துத் தெரிவிக்கும் அவலநிலை ஆட்சிதான் இங்கு நடைபெறுகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பள்ளியையும் நடத்தி வருகிறது.
கிறிஸ்தவ பள்ளியில் கற்பழித்து கொலை: மாணவி குடும்பத்துக்கு நீதி எங்கே? பிரபல அரசியல் விமர்சகர் கேள்வி!