நடிகர் செல்வராகவனின் ட்விட்டர் பதிவு ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவன். இவர், துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை வழங்கியவர். அந்தவகையில், இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவ்வபோது, இவர் தனது ட்விட்டர் பக்கங்களில் தனக்கு கிடைத்த அனுபவங்களை பகீர்வது உண்டு. அந்த வகையில், இவரது பதிவிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
இந்த நிலையில், செல்வராகவன் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் : “இங்கே உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்திற்கு அவ்வளவு சந்தோசம். கூத்தாடும். உங்களை புதைத்து விட்டுதான் அடுத்த வேலை பார்க்கும். அங்கிருந்து மீண்டு வருவதுதான் உங்கள் சாதனை” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.