தபால் நிலையங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில், வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி, 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. மேலும், 3 ஆண்டுகால டெபாசிட்களுக்கான வட்டி, 7 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
அதேசமயம், பொது சேமநல நிதி, கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருவாய் திட்டம் உள்ளிட்ட இதர சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை” என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது.