செங்கோல்னா என்னான்னு தெரியுமா..? அதோட பவர் தெரியுமா..? வெளுத்து வாங்கும் இளம்பெண் வீடியோ!

செங்கோல்னா என்னான்னு தெரியுமா..? அதோட பவர் தெரியுமா..? வெளுத்து வாங்கும் இளம்பெண் வீடியோ!

Share it if you like it

செங்கோல் குறித்தும், திராவிட கும்பலின் எதிர்ப்பு குறித்தும் இளம்பெண் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு பாரத பிரதமர் மோடியால் நேற்று திறக்கப்பட்ட பார்லிமென்ட் கட்டடத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் இச்சம்பவத்துக்கு, திராவிட கும்பல் எதிர்ப்புத் தெரிவித்து ஊளையிட்டு வருகிறது. இதுபோன்ற தேச விரோத சக்திகளுக்கு சவுக்கடியாக செங்கோல் குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் இளம்பெண் ஒருவர் விளக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தேச பக்தர்களும், தமிழர்களும் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் பேசும் பெண், “புதிய பார்லிமென்டில் செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. இதற்கு, தமிழர்கள் உட்பட பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இது ஜனநாயகம் அல்ல, முடியாட்சி என்கிறார்கள். ஆம், செங்கோல் என்பது அதிகாரத்தின் அடையாளம்தான். உதாரணமாக, எகிப்து, மெசபடோமியா, கிரேக்கம், ரோமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் மன்னர்கள் செங்கோல் வைத்தே ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால், தமிழ் கலாசாரத்தை பொறுத்தவரை செங்கோலுக்கான அர்த்தமே வேறு.

தமிழகத்தில் செங்கோல் என்பது அதிகாரத்துக்கான அல்ல, நீதிக்கானது. நீதிநெறி தவறாத ஆட்சிக்கானது. இதை நிரூபிக்க நம்மிடம் நூற்றுக்கணக்கான இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன. இதில் மிகவும் புகழ்பெற்றது கண்ணகியும், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கதைதான். இதை வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது என்று குறிப்பிடுகிறார் கதையின் ஆசிரியர். இத்தகைய சிறப்பு வாய்ந்த செங்கோலை நிறுவியதில் என்ன தவறு இருக்கிறது” என்று கேட்கிறார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…


Share it if you like it