காந்தி, நேருவுக்கு சொகுசு… சாவர்க்கருக்கு சித்ரவதை… மூத்த பத்திரிகையாளர் மணி ஓப்பன் டாக்!

காந்தி, நேருவுக்கு சொகுசு… சாவர்க்கருக்கு சித்ரவதை… மூத்த பத்திரிகையாளர் மணி ஓப்பன் டாக்!

Share it if you like it

சிறையில் காந்தி, நேருவுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், சாவர்க்கருக்கு கொடுஞ்சிறை தண்டனை வழங்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.

எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருபவர் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கர். இவர், ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததாக தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இந்த சூழலில், மோடி சமூகத்தை இழிவாகப் பேசிய குற்றத்திற்காக தண்டனை பெற்று, எம்.பி. பதவியையும் இழந்திருக்கும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மன்னிப்புக் கேட்பதற்கு எனது பெயர் சாவர்க்கர் இல்லை. ராகுல் காந்தி என்று சாவர்க்கரை அவமானப்படுத்தும் வகையில் திமிராகக் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. குறிப்பாக, வீர் சாவர்க்கர் பிறந்த மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில்தான், மூத்த பத்திரையாளரும், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளருமான மணி, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வீர் சாவர்க்கர் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். குறிப்பாக, சுதந்திரப் போராடத்தின்போது கைது செய்யப்பட்ட காந்தி, நேரு ஆகியோருக்கு சிறையில் சொகுசாக இருக்க அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டதாகவும், அதேசமயம் சாவர்க்கர் சிறையில் கொடும் சித்ரவதைக்கு ஆளானதாகவும் கூறியிருக்கிறார். அதாவது, சாவர்க்கர் உண்மையிலேயே சிறையில் வதைபட்டவர் என்பதும், அவரை இழிவாகப் பேசுவது தவறு என்றும் மணி மறைமுகமாகக் கூறியிருக்கிறார். சாவர்க்கர் பற்றி மணி இன்னும் என்னவெல்லாம் சொன்னார் என்பது பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்…


Share it if you like it