கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க காசில்லை, நன்கொடை வாங்கித்தான் கட்சி நடத்துறோம்னு சொன்னா எளிமை நேர்மைங்கிறீங்க, அதே அண்ணாமலை சொன்னா எதிர் கேள்வி எழுப்புகிறீர்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே குட்டு வைத்திருக்கிறார்.
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கும், தி.மு.க.வுக்குமான மோதல் போக்கில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வாட்ச் பற்றி கேள்வி எழுப்பினார் தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி. இதற்கு தனது வாட்ச் பில்லையும், கூடவே தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினரின் சொத்துப் பட்டியலையும் சேர்த்து வெளியிட்டார் அண்ணாமலை. மேலும், செய்தியாளர்களிடம் பேசியபோது, தனது மாதத்துக்கு 8 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. தனது வீட்டு வாடகை, உதவியாளர் சம்பளம் வரை எனது நண்பர்கள் கொடுத்து உதவி செய்கிறார்கள். வாகனத்துக்கு பெட்ரோல் செலவு கட்சி தருகிறது என்று கூறிய அண்ணாமலை, தனது 10 வருட வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்ட்டையும் எடுத்துப் போட்டார்.
இதையடுத்து, அண்ணாமலை மீதான தனி மனித தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள் தி.மு.க.வினர். அவரது குடும்பத்தைப் பற்றியும் மிகவும் கேவலமாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில், மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவிடம், தனியார் யூடியூப் சேனல் ஒன்று பேட்டி கண்டது. அப்போது பேசிய பாண்டே, தனது 10 வருட வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட்டதோடு, தனக்கு நண்பர்கள் பணம் கொடுத்து உதவுவதாக வெளிப்படையாக அறிவித்து அண்ணாமலையை நியாயப்படி கொண்டாட வேண்டும். இதே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தங்களிடம் பணம் இல்லை. நன்கொடை பெற்றுத்தான் கட்சியை நடத்துகிறோம் என்று சொன்னால், எளிமை நேர்மை என்று சொல்பவர்கள், அதையே அண்ணாமலை சொன்னால் எதிர் கேள்வி கேட்கிறார்கள். இதுதான் அரசியல்” எந்று கூறியிருக்கிறார்.
இன்னும் அண்ணாமலை பற்றி என்னவெல்லாம் பாண்டே சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள, கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.