வடமாநிலத்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுவிட்டார்கள் என்று அறிவிலிகளும், அயோக்கியர்களும், தற்குறிகளும் திட்டமிட்டு வதந்தியை பரப்பி வருகின்றனர் என்று கம்யூனிஸ்ட் பத்திரிகையாளர் மணி தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் புதிது புதிதாக முளைத்து வருகின்றனர். இதுபோன்ற நிறுவனங்கள் தங்களது தேவைக்காக வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருகின்றன. தவிர, பிழைப்புத் தேடி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வருகை தரும் வடமாநிலத்தினரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இத்தொழிலாளர்களில் சுமார் 1 கோடி பேர் தமிழகத்தில் வாக்குரிமை பெற்று விட்டதாக சில விஷமிகள் திட்டமிட்டு பொய்ச் செய்தி பரப்பி வருகின்றனர். குறிப்பாக, தி.மு.க.வினரும், தி.மு.க. ஆதரவு கட்சிகளும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கம்யூனிஸ்ட்களும், வடமாநில தொழிலாளர்களால் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இத்தொழிலாளர்களை அடித்து விரட்ட வேண்டும் அல்லது பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ள வேண்டும் என்றெல்லாம் பேசியும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.
இந்த சூழலில்தான், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மணி, வடமாநில தொழிலாளர்கள் வாக்குரிமை பெற்று விட்டார்கள் என்பது அறிவிலிகள், அயோக்கியர்கள், தற்குறிகளால் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் வதந்தி. இந்தியா என்பது ஒரு நாடு. இங்கு வசிக்கும் யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை பார்க்கலாம். மேலும், வடமாநில தொழிலாளர்களை வடக்கன் என்று சொல்கிறார்கள். இது மிகவும் கொச்சையான வார்த்தை. இது மிகவும் தவறு. நம்மைப் போல் அவர்களும் மனிதர்கள்தான் என்று கூறியிருக்கிறார்.
வடமாநில தொழிலாளர்கள் பற்றி மணி இன்னும் என்னவெல்லாம் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமா? கீழே உள்ள வீடியோவை பாருங்கள்…