மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது . அமைச்சர் செந்தில் பாலாஜி தனது மருத்துவ காரணங்களை காரணம் காட்டி பெயில் மனு தாக்கல் செய்தார். தனக்கு இதயத்தில் பிரச்சனை உள்ளது. நோய் தொற்று உள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. காலில் ரத்த கட்டு உள்ளது. இதனால் கடுமையான கால் வலி உள்ளது. கல்லீரலில் கடுமையான பிரச்சனை உள்ளது என்று செந்தில் பாலாஜி தனது மனுவில் கூறி இருந்தார். இதை காரணமாக வைத்து தனக்கு பெயில் கொடுக்க வேண்டும் என்று மனுவில் கூறினார். உயர் நீதிமன்றம் ஜாமீன் கொடுக்காத நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் அவரின் மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது . மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியதாவது : செந்தில் பாலாஜியின் மூளை பாதிப்பு குறித்து கூகுளில் தேடி பார்த்தேன். மருந்து எடுத்துக்கொண்டால் அது சரிசெய்யக்கூடிய பிரச்சனையே. இன்று பைபாஸ் சிகிச்சை எல்லாம் அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் போல சாதாரணமாகிவிட்டது. எனவே மருத்துவ காரணங்களுக்காக செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தர முடியாது. இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதி திரிவேதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.