தி.மு.க சார்பில் கரூரில் போட்டியிடுகிறார் ’செந்தில் பாலாஜி’ பொது மக்களிடையே அண்மையில் உரையாற்றும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
“ 11 மணிக்கு முதலமைச்சராக தளபதி பதவியேற்றுக் கொண்டால், 11.05க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான்; தடுத்தா எனக்கு போன் போடுங்க; அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான் என்று குறிப்பிட்டு உள்ளார் கழக கண்மணி. ’
தி.மு.க ஆட்சிக்கு வரும் முன்பே ’செந்தில் பாலாஜி’ அரசு அதிகாரிகளை மிரட்டும் வண்ணம் பேசுகிறாரே. நாளை தி.மு.க வந்தால். தமிழகத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை, அறிவார்ந்த தமிழ் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். தி.மு.க சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்பது இதுதானா இது குறித்து வாய் திறப்பாரா? தி.மு.க சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் – கார்த்திகேய சிவசேனாபதி என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.