சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (21-02-2023) சேவாபாரதியின் நான்காவது நடமாடும் மருத்துவ ஊர்தி துவங்கப்பட்டது. கனரா வங்கி CSR பங்களிப்பில் நடமாடும் மருத்துவ ஊர்தி ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் சேவாபாரதி தமிழ்நாடு மற்றும் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து வேல்ஸ் சேவாபாரதி நடமாடும் மருத்துவ முகாம்கள் எனும் தலைப்பில் திருவள்ளூர் மாவட்டத்திற்கான ஊர்தி இன்று துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராஷ்டிரிய சேவாபாரதி அறங்காவலர் திரு சந்திரசேகர் அவர்கள், ராஷ்ட்ரிய சுயம்சேவக சங்க தென்பாரத மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் திரு பிரகாஷ் அவர்கள், கனரா வங்கி இயக்குனர் திருமதி நளினி பத்மநாபன் அவர்கள், சேவாபாரதி மாநிலத் தலைவர் திரு ரபு மனோகர் அவர்கள், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் திரு ஐசரி கணேஷ் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடமாடும் மருத்துவ ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்தார். சேவா பாரதி மாநில பொறுப்பாளர்கள், கனரா வங்கி அலுவலர்கள், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், திருவள்ளூரின் பல்வேறு பகுதிகளில் வந்த மக்கள் பிரதிநிதிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே சென்னையில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இரண்டு நடமாடும் மருத்துவ ஊர்தி முகாம்கள் மூலம் சேவையை செய்து வருகிறது, கடந்த ஆண்டு லாரி மற்றும் தொலைதூர ஓட்டுனர்களுக்காக ஆரோக்கிய சாரதி என்ற பெயரில் நடமாடும் மருத்துவ ஊர்தி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்திற்கு நடமாடும் மருத்துவ ஊர்தி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் சேவாபாரதியின் நான்காவது நடமாடும் மருத்துவ ஊர்தி துவங்கப்பட்டது
Share it if you like it
Share it if you like it