தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வரும் நிலையில், சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பல குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தெருக்களில் தேங்கி உள்ளதாகவும், இதுகுறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் மெத்தனமாக அதிகாரிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளதால் கொசுக்கள் அதிகரித்து டெங்கு மலேரியா போன்ற நோய்கள் வரவும் நோய்த்தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். இதுதொடர்பாக சென்னை நுங்கப்பாக்கம் அருகே உள்ள கக்கன் தெருவில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தெருவில் குளம்போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து ஒரு பெண்மணி ஒருவர் கூறுகையில், கால்வாய் தண்ணி 3 மாசமா நிக்குது.. ஒரே நாத்தம்.. லாரி வெச்சி தண்ணி எடுக்குறேன்னு சொல்றாங்க.. அப்படியே எடுத்தாலும் மறுபடியும் கழிவுநீர் கலந்துருது”, பெரிய பதவியில் இருக்கும் மனிதர்களும் அதே பகுதியில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்க முயல்வதில்லை என்று கூறுகின்றனர்.
https://x.com/polimernews/status/1727510291473195446?s=20