முஸ்லீம் பெண்ணை காதலித்த எஸ்.சி வாலிபர் ஆணவ கொலை!

முஸ்லீம் பெண்ணை காதலித்த எஸ்.சி வாலிபர் ஆணவ கொலை!

Share it if you like it

முஸ்லீம் பெண்ணை காதலித்த ஒரே காரணத்திற்காக பட்டியல் சமூகத்தை சேர்ந்த வாலிபரை படுகொலை செய்த அடிப்படைவாதிகள்.

கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டம் பீமா நகர் லே அவுட் பகுதியில், தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் (25) விஜய் காம்ப்ளே. இவர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். ஷஹாபுதீன் என்பவரின் சகோதரியை விஜய் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்து கடும் கோவம் அடைந்த ஷஹாபுதீன், விஜய்யின் தாயாரை 6 மாதங்களுக்கு முன்பு சந்தித்து, உங்களது மகன் காதல் உறவை முறித்துக் கொள்ளாவிட்டால் அவனது தலையை வெட்டி விடுவேன் என்று பகீரங்க மிரட்டல் விடுத்து இருந்தார். ஆனால், இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களது காதல் தொடர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், ஷஹாபுதீன் மற்றும் அவரது கூட்டாளி நவாஸ் கொடூரமான முறையில் இந்த படுகொலையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து விஜய்யின் தாயார் கூறியதாவது; அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நீண்ட நேரம் யாருடனோ பேசிக் கொண்டு இருந்தான். யாரிடம் இவ்வளவு நேரம் பேசுகிறான் என நான் யோசித்துக்கொண்டிருந்தேன். அவனிடம், இது குறித்து நான் எந்த கேள்வியையும் கேட்கவில்லை. இதையடுத்து, உடனே அவன் வீட்டை விட்டு வெளியேறினான். சிறிது நேரம் கழித்து அவன் அடிப்பட்டு கிடப்பதாக எனக்கு போன் வந்ததது. நான் உடனே சென்று பார்த்த பொழுது கத்தியால் குத்தப்பட்டும் தலையில் காயமுடனும் இருந்தான் என குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு, அப்பெண்ணின் சகோதரர் தான் காரணம் என விஜய்யின் அண்ணன் ராகவேந்திராவும் குற்றம் சுமத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதம் என பிரிந்தது போதும் என பாடி வரும் தி.மு.க, தி.க. வி.சி.க.வை சேர்ந்த தோழர்கள் இது குறித்து பேசுவார்களா? அல்லது அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் இந்த கொடிய செயலுக்கு கண்டனமாவது தெரிவிப்பார்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்த செய்தியினை பிரபல இணையதள ஊடகமான ஓப் இந்தியா செய்தியாக வெளியிட்டுள்ளது.

அதன் லிங்க் இதோ.

/https://www.opindia.com/2022/05/hate-crime-karnataka-shahabuddin-nawaz-arrested-murdering-sisters-hindu-boyfriend-tension-kalaburagi/

/

Vijay Kamble murdered by Muslim girlfriend's brother

Share it if you like it