பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், அப்பாவி மக்கள் பலர் உடல் சிதறி பலியாகிய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகளின் தாய் வீடாகவும், சொர்க்கபுரியாகவும் பாகிஸ்தான் இன்று வரை இருந்து வருகிறது. இதன் காரணமாக, அதன் அண்டை நாடுகளுக்கு மட்டுமில்லாது, உலக நாடுகளுக்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது பாகிஸ்தான். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்திய பலருக்கு அடைக்கலம் கொடுத்து உள்ளது அந்த நாடு. இப்படியாக, மனித குலத்திற்கே பெரும் கேட்டை உருவாக்கி வரும் பாகிஸ்தானில் நேற்றைய தினம், மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ளது புகழ் பெற்ற ஷியா மசூதி. இந்த மசூதியின் மீது தான் நேற்றைய தினம், தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், 50-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி, கொடூரமான முறையில் கொல்லப்பட்டுனர். மற்றும் 196-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/https://edition.cnn.com/2022/03/04/asia/pakistan-peshawar-blast-intl/