கோவில் நிலத்தில் இடத்தை வைத்து கொண்டு முறையாக வாடகை பாக்கியை வழங்கா விட்டால் அடுத்த பிறவியில் அவர்கள் வவ்வாலாக பிறப்பார்கள் மதுரை ஆதீனம் கருத்து.
மிகவும் புனிதம் வாய்ந்த மதுரை ஆதின மடத்தின் 292வது மடாதிபதி சமீபத்தில் முக்தியடைந்ததை தொடர்ந்து புதிய மடாதிபதியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டவர் ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். இவர் பதவி ஏற்றுக் கொண்ட பின்பு, ஹிந்து மதம், தேசம், ஆன்மீகம், கோவில்கள் மற்றி தனது மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே மக்களிடம் கடத்தி விடுவதை இன்று வரை வாடிக்கையாக கொண்டு உள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கொடுக்காமல், தமிழக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஆன்மீக பக்தர்கள் தங்கள் உணர்வுகளை தி.மு.க அரசிற்கு காட்டி கொண்டு இருந்த சமயத்தில், ’விநாயகர் சதுர்த்தி இன்றல்ல நேற்றல்ல, வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாப்பட்ட விழா. அதற்கு தடை விதித்திருப்பது சரியல்ல. விநாயகர் சதுர்த்தியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று மதுரை ஆதீனம் மிகவும் துணிச்சலாக தி.மு.க அரசிற்கு கோரிக்கை வைத்தார். மதுக்கடைகளால் மாணவர் சமுதாயம் பாழ்படுகிறது மதுக்கடைகளை மூட வேண்டும் என துணிச்சலாக கருத்து தெரிவித்தவர்.
கோவில் நிலத்தில் வாடகை பாக்கி வைத்தால், முறையாக வாடகை பணத்தை கொடுக்கவில்லை என்றால் அடுத்த பிறவியில் அவர்கள் வவ்வால்களாகவும், பெருச்சாளிகளாவும், மூஞ்சுறுகளாகவும் தான் பிறப்பார்கள் கோவில் சொத்துக்கள் குலநாசம் என அவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தி.மு.க ஆட்சியில் ஹிந்து கோவில்கள் அதிகமாக இடிக்கப்பட்டு வரும் நிலையில் மதுரை ஆதீனம் கொடுத்து இருக்கும் அறிவுரை ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.