தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை மஞ்சகொல்லையில், வெறும் 25 ஏக்கரில் சொகுசு பங்களா ஒன்று உள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டு துரைமுருகன் குடும்பமே தற்போது சிகிச்சை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சொகுசு பங்களாவில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தி கொண்ட பலே திருடர்கள்.
தங்கள் கைவரிசையைக் காட்ட முயன்றுள்ளனர். வீடு முழுவதும் தேடி, பணம் மற்றும் நகை எதுவும் கிடைக்காத காரணத்தினால். ஏமாற்றம் அடைந்த பலே திருடர்கள். ஒரு 100 ரூபாய் கூட வைக்க மாட்டியா? என்று சுவற்றில் லிப்ஸ்டிக்கை கொண்டு எழுதி உள்ளனர்.
இவ்வளவு தூரம் திட்டம் போட்ட திருடர்கள். அது வெறும் துரைமுருகன் வீடா அல்லது D. துரைமுருகன் வீடா என்பதை. முன்பே கணித்து இருந்தால், இவ்வளவு தூரம் சங்கடபட வேண்டியது இல்லை. என்று நெட்டிசன்கள் ஏமாற்றம் அடைந்த நபர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.