நமது இளைஞர்கள் சாதிக்க வேண்டுமா அல்லது, வெளிநாட்டு வீரர்கள் சாதிக்க வேண்டுமா? – அண்ணாமலை கேள்வி ?

நமது இளைஞர்கள் சாதிக்க வேண்டுமா அல்லது, வெளிநாட்டு வீரர்கள் சாதிக்க வேண்டுமா? – அண்ணாமலை கேள்வி ?

Share it if you like it

கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, இடிகரை, வெள்ளமடை, கஸ்தூரிபாளையம், வீரபாண்டி பிரிவு பகுதிகளில், பொதுமக்களின் பேரன்புடனும், ஆதரவுடனும் அளித்த எழுச்சிமிகு வரவேற்புடன், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, தாமரை சின்னத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்குகள் சேகரித்தார்.

இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

கடந்த 2004 – 2014 ஆண்டுகளில், திமுக காங்கிரஸ் உள்ளிட்ட இதே இந்தி கூட்டணி கட்சிகள், பிரதமர் யார் என்றே அறிவிக்காமல் தேர்தலைச் சந்தித்து, முப்பது கட்சிகள் சேர்ந்து திரு. மன்மோகன் சிங் அவர்களைப் பிரதமராக அறிவித்தன. நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமரான அவரால், திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் செய்த 12 லட்சம் கோடி ஊழலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது மீண்டும் அதே போன்ற ஊழல் ஆட்சியைக் கொண்டு வர கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் இம்முறை தெளிவாக இருக்கிறார்கள். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பத்தாண்டு கால நல்லாட்சி, ஏழை எளிய மக்கள், தாய்மார்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கான ஆட்சியாக அமைந்தது. கடந்த 2019 தேர்தலின்போது கொடுத்த 295 வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றிவிட்டு, மூன்றாவது முறையாக, வளர்ச்சியை வேகப்படுத்த, உலக அரங்கில் அடுத்த 25 ஆண்டுகளில் முதல் நாடாக நமது நாடு உருவாக அடித்தளம் அமைக்கும் ஆட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த பத்து ஆண்டுகளில், நமது கோவையின் வளர்ச்சி மிகவும் பின்தங்கி விட்டது. பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தாமல்,கோவையின் சாலைகள் குண்டும் குழியுமாக, குடி தண்ணீர், பாசனத்துக்குத் தண்ணீர் என அனைத்தும் பற்றாக்குறையாக இருக்கிறது. இதனைச் சரி செய்ய, நமக்கு, நமது பிரதமரின் திட்டங்களை முழுமையாக, ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாமல் செயல்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் தேவை.

நாம், நமது இளைஞர்கள், விளையாட்டில் சாதிக்க, ஒவ்வொரு பஞ்சாயத்து தலைக்கிராமத்திலும், விளையாட்டு மைதானம் கொண்டு வரப் போகிறோம். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின், 4,000 கோடி செலவில், கிரிக்கெட் மைதானம் கொண்டு வரப்போகிறாராம். நமது இளைஞர்கள் சாதிக்க வேண்டுமா அல்லது, வெளிநாட்டு வீரர்கள் சாதிக்க வேண்டுமா? 4,000 கோடியில், நமது கோவைக்கு நல்ல சாலைகள் அமைக்கலாம். குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். ஆனால், திமுகவுக்கு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை இல்லை.

கோவையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நேரடிப் பார்வையில் தீர்வு கிடைத்திட, கோவை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணித்திட, நமது குழந்தைகளின் எதிர்காலம் சிறந்திட, நமது இளைஞர்கள், தாய்மார்கள் முன்னேற்றம் பெற்றிட, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு, வெற்றியின் சின்னம், மாற்றத்தின் சின்னம், வளர்ச்சியின் சின்னமாம் தாமரை சின்னத்தில், கோவையின் முன்னேற்றத்துக்காக, கட்சி வேறுபாடின்றி வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


Share it if you like it