தேச விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய வீரர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் !

தேச விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய வீரர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் !

Share it if you like it

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அவர் பிறந்த ஊரான பசும்பொன்னில் இன்று நடைப்பெற்று வருகிறது. இதற்கான விழா அவரது நினைவிடத்தில் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கியது.

தேசியத்தையும் தெய்வீகத்தையும் தமது இரு கண்களாகக் கருதிய மாமனிதர் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் திரு.பிரமோத் சாவந்த் அவர்கள் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினர்.

தேச விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய வீரர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். ஏழை எளிய மக்களுக்காக தமது சொத்துக்களை அனைத்தும் வழங்கிய வள்ளல். அனைத்து சமுதாய மக்களும் ஆலயத்துக்குள் செல்ல, ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்தவர். தென்னகத்தின் போஸ் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் புகழ் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இன்று நடக்கும் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், பாஜக தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிடோர் பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் திரு.ரவி அவர்களும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் நெருக்கமாக பணியாற்றியவருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாளை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. அவரது தியாகங்கள் பாரதத்தை ஒரு சிறந்த தேசமாக உருவாக்க நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.இவ்வாறு சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share it if you like it