30 நாட்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரின் மனுக்களுக்குத் தீர்வு : ஸ்டாலின் பெருமிதம் ! அதெல்லாம் இருக்கட்டும் கிளாம்பாக்கம் பிரச்சனைக்கு என்ன பண்ணிங்க சொல்லுங்க – நெட்டிசன்கள் !

30 நாட்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரின் மனுக்களுக்குத் தீர்வு : ஸ்டாலின் பெருமிதம் ! அதெல்லாம் இருக்கட்டும் கிளாம்பாக்கம் பிரச்சனைக்கு என்ன பண்ணிங்க சொல்லுங்க – நெட்டிசன்கள் !

Share it if you like it

30 நாட்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரின் மனுக்களுக்குத் தீர்வு கண்டு, மக்களின் மனம்நிறைந்த பாராட்டைப் பெற்றுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்த எத்தனையோ சிக்கல்களுக்குத் தீர்வு கிட்டியதால் பல முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் மலர்ந்த முகங்களைச் செய்திகளில் பார்த்தேன். ஊடகங்களின் பாராட்டைப் படித்து நிறைவாக உணர்ந்தேன். இதற்காக உழைத்த அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், நன்றியும்!

தீர்வைத் தேடி மக்கள் அலைவதைத் திருத்தி, தீர்வுகள் மக்களைத் தேடிச் செல்லும் காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது நமது #DravidianModel அரசு.

அரசின் சேவைகளை மக்கள் விரைந்து பெறுவதிலுள்ள சுணக்கங்களைத் தொடர்ந்து கள ஆய்வுகள் மூலமாக நான் கண்டறிவேன். அவற்றைக் களைந்து, நடைமுறைகளை எளிதாக்க #MakkaludanMudhalvar போல இன்னும் பல திட்டங்களைத் தீட்டுவேன்! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய மாற்றத்தால் மக்கள் ஊருக்கு செல்ல வேண்டிய பேருந்து கிடைக்காமல் பேருந்து நிலையத்திலேயே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலைய மாற்றத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு நீண்ட நேரம் சாலையிலே கால் கடுக்க நிற்கவேண்டிய நிலைமை மறுபுறம். பேருந்து நிலைய மாற்றத்தால் மக்கள் பலரும் திமுக அரசை திட்டி தீர்த்து வருகின்றனர். ஒரு பேருந்து நிலையத்தை கூட சரியான இடத்தில் கட்ட தெரியவில்லை. இவர்கள் எல்லாம் எதற்கு ஆட்சி நடத்துகிறார்கள் என்று மோசமான வார்த்தைகளால் திமுக அரசை வசை பாடி வருகின்றனர்.

திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்த வித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பேருந்து நிலையத்தை சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றிய திமுக அரசு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து நாற்பது நாட்கள் கடந்தும், இன்னும் பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.

குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கான பயணிகள் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் செய்தும், பேருந்துகளைச் சிறைபிடித்தும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

ஒரு பேருந்து நிலைய பிரச்சனைக்கே திமுக அரசால் தீர்வு காண முடியவில்லை. இதில் 30 நாட்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரின் மனுக்களுக்குத் தீர்வு கண்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் வாயாலே வடை சுடுகிறார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் திமுக அரசை வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it