‘நான் தாலிபான்… விமானத்தை தகர்க்கப் போகிறேன்’: பதறிய போலீஸ், விமான நிலைய அதிகாரிகள்!

‘நான் தாலிபான்… விமானத்தை தகர்க்கப் போகிறேன்’: பதறிய போலீஸ், விமான நிலைய அதிகாரிகள்!

Share it if you like it

‘நான் ஒரு விமானத்தில் இருக்கிறேன். அந்த விமானத்தை இப்போது வெடிக்க வைக்கப் போகிறேன். ஏனெனில் நான் தாலிபான்’ என்றொரு மெசேஜ் வரவே, போலீஸாரும், ராணுவமும், விமான நிலைய அதிகாரிகளும் பதறிப்போய் விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்வதர் ஆதித்யா வெர்மா. 18 வயதாகும் இவர், செஸ் விளையாட்டு வீரர். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு விமானத்தில் பயணம் செய்திருக்கிறார். அந்த விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு, ஆதித்யா தனது நண்பர்களுக்கு ஸ்நாப் சாட்டில் ஒரு மெசேஜை அனுப்பி இருக்கிறார். அதில், “நான் ஒரு விமானத்தில் இருக்கிறேன். இந்த விமானத்தை தற்போது வெடிக்க வைக்கப் போகிறேன். ஏனெனில் நான் ஒரு தாலிபான்” என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் பயந்துபோன அவரது நண்பர்கள் இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் பதறிப்போன போலீஸார், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். உடனே பரபரப்பான விமான நிலைய அதிகாரிகள், விமானத்தை நிறுத்த முற்பட்டனர். ஆனால், அதற்குள் விமானம் கிளம்பி விட்டது. இதையடுத்து, மேற்கண்ட விமானத்தில் பயணம் செய்பவர்களின் பட்டியலில் ஆதித்யா வெர்மா என்பவர் பெயர் இருக்கிறதா என்று பார்த்திருக்கிறார்கள். அந்தப் பெயர் இருப்பதை உறுதி செய்யப்பட்டது. இதனால், பதட்டமடைந்த விமான நிலைய அதிகாரிகள், ராணுவத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, ராணுவத் தரப்பில் 2 ஜெட் விமானங்களை அனுப்பி, வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தை உடனே தரையிறக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, பயணிகள் விமானத்தை விரட்டிச் சென்று பிடித்த ஜெட் விமானத்தின் விமானிகள், விஷயத்தை எடுத்துக்கூறி விமானத்தை தரையிறக்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த விமானம் அவசர அவசரமாக ஒரு தீவில் தரையிறக்கப்பட்டது. பின்னர், விமானத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும், மேற்கண்ட மெசேஜை அனுப்பி ஆதித்யா வெர்மாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, தான் விளையாட்டாக அந்த மெசேஜை நண்பர்களுக்கு அனுப்பியதாகவும், அது இவ்வளவு சீரியஸாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் சொல்லி மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஆனால், அதிகாரிகளோ ஆதித்யாவை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it