கனடா இந்தியா இடையிலான காலிஸ்தான் பயங்கரவாதிகள் முன்வைத்து முருகல் காரணமாக கனடா உலக அரங்கில் தனிமைப்பட தொடங்கி இருக்கிறது . அதன் காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு அதற்கு எதிராக திரும்பி இருக்கிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிடும் இலங்கை சரியான நேரத்தில் தனது சதுரயமான ராஜ்ய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது . அந்த வகையில் எப்படி கனடா காலிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து பாரதத்திற்கு ஊறு விளைவிக்கு விளைவிக்க துணை நிற்கிறதோ ? அதே வகையில் இலங்கையின் போராட்டக் குழுக்களுக்கும் அதன் பயங்கரவாத தலைவர்கள் அமைப்புகளுக்கும் தனமாக மாறி அவர்களையும் பாதுகாப்பாக வசதியாக வாழ்வதற்கு துணை நின்றது . அவர்களுக்கு அரசியல் ஆயுதம் பொருளாதார உதவிகளை செய்தது. அவர்களை வாக்கு வாங்கி அரசியலாக பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கான அரசியல் லாபியாக மாறியது. அந்த அரசியல் ஆதாயத்திற்காக இலங்கையில் போராட்டக் குழுக்களை ஆதரித்து இலங்கையின் உள்நாட்டு அமைதிக்கும் வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலுக்கும் பங்கம் விளைவிக்க துணை நின்றது என்று வெளிப்படையாக கனடாவின் செயல்களை சர்வதேச அளவில் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி ஃஸப்ரி.
இலங்கையின் போராட்டக் குழுக்களின் தலைவர்கள் அவர்களின் குடும்பம் பயங்கரவாத செயல்பாடுகள் பாதுகாப்போடும் வசதியோடும் இயங்கும் தளமாக இன்றளவும் கனடா திகழ்கிறது. ராஜீவ் கொலை வழக்கு விவகாரம் முதல் இலங்கையின் போராட்டக் குழு ஆதரவு நிலைப்பாடு வரை வெளிப்படையாக கனடாவில் இருக்கும் இலங்கை தமிழர் அரசியல் லாபி சர்வதேச அளவில் இயங்குவது குறிப்பிடத்தக்கது. இவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளும் பிரிவினைவாத விவகாரங்களும் நன்கு அறிந்த போதும் கனடா நாடு அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை. ஆனால் அகதிகள் என்ற போர்வையில் அவர்கள் முன்னெடுக்கும் இலங்கையின் உள்நாட்டு குழப்பம் இந்தியாவில் தனி தமிழ்நாடு கோரிக்கை பிரிவினைவாதம் உள்ளிட்ட அனைத்தையும் அவர்கள் அங்கே சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறது.
நாடு கடந்த தமிழ் ஈழம் என்ற பெயரில் இலங்கை தமிழ் பகுதிகள் இந்திய தமிழகத்தின் பகுதிகள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து அவர்கள் கட்டி எழுப்பியிருக்கும் ஒரு பெரும் அரசியல் அமைப்பிற்கு கனடாவில் ஆதரவும் உண்டு அந்த அமைப்பிற்கு அங்கு முழுமையான அரசியல் லாபியும் உண்டு அந்த வகையில் இலங்கைக்கு பாரதத்திற்கும் உள்நாட்டு பிரிவினைவாத பயங்கரவாத செயல்கள் அனைத்திற்கும் கனடா இன்றுவரை பயங்கரவாத ஆதரவு பாதுகாப்பு தளமாக இருக்கிறது .பல்வேறு நாடுகளில் இலங்கை இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இலங்கையின் போராட்டக் குழுக்களுக்கும் அதன் நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில வல்லரசு நாடுகளில் பெயரளவில் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அந்த போராட்டக் குழுக்களும் அதன் பயங்கரவாத நடவடிக்கைகளும் சர்வ சாதாரணமாக அதன் இயல்பில் பயணித்தது. குறிப்பாக கனடா பிரிட்டன் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் இலங்கை போராட்டக் குழுக்களுக்கும் அகதிகளாக வெளிநாடுகளில் அரசியல் லாபியில் இருந்த மக்களுக்கும் ஒரு சர்வதேச தளமாக இருந்தது.
இதன் காரணமாக இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தையும் முடிவுக்கு கொண்டு வர முடியாமல் வளர்ச்சியையும் முன்னெடுக்க முடியாமல் பெரும் சிரமங்களை இலங்கை அரசு எதிர்கொண்டது. ஏராளமான உயிரிழப்புக்கள் இலங்கை ராணுவத்தில் நேரிட்ட காரணம் பொதுமக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது அதிருப்தி. போராட்டக் குழுக்களின் மீதான எதிர்ப்பும் மனநிலை என்று உள்நாட்டில் பெரும் கொந்தளிப்பு நிலவியது. ஆனால் எந்த ஒரு வல்லரசு நாடும் இலங்கையின் அந்த அரசியல் சிக்கலுக்கு சுமூகமான தீர்வு காணவோ போராட்டக் குழுக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு இணக்கமான சூழல் வருவதற்கு முழு முயற்சி எடுக்கவில்லை. ஆனால் இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையில் இருந்து தங்களுக்கான சுயலாபத்தை கட்டி எழுப்பும் கேந்திர அரசியலை எல்லா நாடுகளும் செய்தது.
இந்து மகா சமுத்திரத்தின் தளம் வல்லரசு நாடுகளுக்கு கட்டாயம் தேவை. இந்து மகா சமுத்திரத்தின் ஒரு முக்கிய கேந்திரமாக இருக்கும் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி . அது தங்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த ஒவ்வொரு நாடும் இலங்கை அரசுக்கும் போராட்டக் குழுக்களுக்கும் இடையே புகுந்து விளையாடியது. அதன் விளைவு ஒரு புறம் இலங்கைக்கும் நிதி உதவி ஆயுதம் வளர்ச்சிப் பணிகள் என்று உதவிக்கரம் நீட்டும் .மறுபுறம் போராட்டக் குழுக்களுக்கு பொருளாதார ஆயுதம் அரசியல் உதவிகள் வழங்கும் . போராட்டக் குழுக்களுக்கு ஆதரவான மக்களுக்கு அரசியல் லாபிக்கும் முழுமையான தளமாக இடம் கொடுக்கும் என்று இரட்டை வேடம் பூண்டது.
ராஜிவ் கொலை பிரேமதாசா கொலை விவகாரம் காரணமாக இந்தியா இலங்கை இடையே ஏற்பட்ட பின்னடைவு . கடந்த காலங்களில் ராஜீவ் காந்தியின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை வீரன் விவகாரம் உள்ளிட்ட விஷயங்களில் ஏற்பட்ட ராஜிய முறிவு . இந்திரா காலம் முதலில் இலங்கையின் சூழ்ச்சி அரசியல் காரணமாக இந்தியா இலங்கை இடையே நேரிட்ட கசப்புணர்வு காரணமாக இந்தியாவிடம் இலங்கை நேரடியாக உதவி கோரவும் முடியாது . இந்தியா நேரடியாக இலங்கை விவகாரத்தில் தலையிடவும் முடியாது என்ற நிலை பல காலம் இருந்தது. ஆனாலும் குறைந்தபட்ச புரிந்துணர்வும் உதவி பரிமாற்றங்களும் இருந்து வந்தது.
இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட பல்வேறு வல்லரசு நாடுகளும் போராட்டக் குழுக்களுக்கும் அவர்களின் அரசியல் லாபிக்கும் முழுமையான தளமாக மாறியது அதன் மூலம் ஒரு புறம் இந்திய எதிர்ப்பு மனநிலையில் இருந்த இலங்கையின் போராட்டக் குழுக்களையும் தனிநாடு கோரிக்கை எழுப்பிய இலங்கை தமிழர்களையும் அவர்களின் பக்கம் அரசியல் வாக்கு வங்கியாக மாற்றிக் கொண்டது . அதன் காரணமாக இன்று எப்படி காலிஸ்தான் பயங்கரவாதம் என்ற விஷயத்தை சீக்கிய மக்களின் வாக்கு வாங்கி அரசியலுக்காக கனடா பிரதமர் கையில் எடுத்து இந்தியாவிற்கு எதிராக அரசியல் செய்கிறாரோ? அதே வகையில் உலகம் முழுவதும் புலம்பெயர் தமிழர்களாக அகதிகளாக அரசியல் லாபிகளாக வாக்கு வங்கி மையமாக இருந்த இலங்கை தமிழர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் வேண்டும் என்பதற்காக பல்வேறு உலக நாடுகளும் அதன் ஆட்சியாளர்களும் இலங்கை போராட்ட குழுக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்தார்கள்.
இன்று எப்படி காலிஸ்தான் காஷ்மீர் பயங்கரவாதத்தால் அதற்குரிய வெளிநாடு ஆதரவுகளால் பாரதம் பெரும் இன்னல்களை கடந்து வந்ததோ? அதேபோல இலங்கையும் வெளிநாடுகளில் உதவி பெற்ற இலங்கைப் போராட்டக் குழுக்களாலும் உலகம் முழுவதும் இருந்த அவர்களின் ஆதரவு அரசியல் லாபியாலும் பல்வேறு சிக்கல்களை இழப்புகளை இலங்கை எதிர்கொண்டது. இத்தனை காலம் சர்வதேச நாடுகளை கேள்வி கேட்கவோ எதிர்கொள்ளவோ முடியாது தன் தலை தப்பினால் போதும் என்ற நிலையில் தான் இலங்கை இருந்தது. காரணம் இறுதி யுத்தத்தின் போதும் நடந்த போர் குற்றங்கள் மனிதாபிமானமற்ற செயல்கள் காரணமாக இலங்கையின் மீது ஒரு பெரும் எதிர்மறை பிம்பமும் உலக அளவில் தனிமைப்படும் சூழலும் இருந்தது . அதிலிருந்து வெளி வந்தால் போதும் என்ற நிலையில் இலங்கை பல ஆண்டுகள் மௌனம் காத்தது . ஆனால் உள்நாட்டு திவால் காரணமாக உலக நாடுகளை நம்பியே வாழ்க்கை என்ற நிலைக்கு வந்து விட்டதால் தலைக்கு மேல் போய்விட்டது . இனி ஜான் போனாலும் முழம் போனாலும் ஒன்றுதான் என்ற நிலையில் இலங்கை பேசத் தொடங்கிவிட்டது.
இலங்கை போன்ற ஒரு சாதாரண நாடு சர்வதேச நாடுகளின் உதவியில் வாழும் ஒரு குட்டி தீவு. அதன் குற்றச்சாட்டு கனடாவை என்ன செய்து விட முடியும்? என்று கனடா நினைக்கலாம் . ஆனால் உலக அளவில் காலிஸ்தான் பயங்கரவாதம் அதை முன்வைத்து பாரதத்திற்கு எதிராக கனடா எழுப்பிய கேள்விகளை கூர்ந்து கவனிக்கும் சர்வதேச நாடுகள் . இன்று அடுத்து இலங்கை கனடா மீது முன் வைக்கும் குற்றச்சாட்டை எளிதாக கடந்து போக முடியாது. ஏனெனில் அதில் இருக்கும் ஒரு சில நாடுகளும் இலங்கையின் போராட்டக் குழுக்களுக்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இன்றளவும் தளமாகவும் அரசியல் லாபிவாகவும் இயங்கி வருகிறது. அந்த வகையில் இன்று பாரதத்திற்கும் கனடாவிற்கும் இடையில் வரும் நெருடல் நாளை நாம் நமக்கு வர எவ்வளவு நேரம் ஆகும்? இன்று கனடாவை கைநீட்டி குற்றச்சாட்டை முன்வைக்கும் இலங்கை நாளை நம் மீது இதே குற்றச்சாட்டை முன்வைக்க எவ்வளவு நேரம் ஆகும்? என்று யோசிக்க தொடங்கினால் அது உலக அளவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் அதன் தலைவர்கள் செயல்பாடுகளின் லாபியாக இருக்கும் அந்தந்த நாடுகளில் எதிரொலிக்க தொடங்கும் .
அதன் விளைவுகள் உலக அளவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் அவர்களின் ஆதரவு பின்னணியில் இயங்குபவர்களுக்கும் ஒரு முடிவு கட்டுவதாக இருக்கக்கூடும் . அந்த வரிசையில் காலிஸ்தான் பயங்கரவாதம் அவர்களின் மர்ம மரணங்கள் என்று கலகத்தில் தொடங்கிய ஒரு சர்ச்சை பாரதத்தின் உள்நாட்டு பயங்கரவாதத்திற்கும் அப்பாற்பட்டு பல்வேறு நாடுகளின் உள்நாட்டு அமைதிக்கும் நிரந்தரமான தீர்வையும் பாதுகாப்பு உறுதியையும் வழங்கும். அது பாரதம் முன்னெடுக்கும் எந்த ஒரு ராஜீவ் நடவடிக்கையும் தன் போல பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் ஒரு அமைதியையும் தீர்வையும் வழங்கத் தொடங்கி இருப்பது சர்வதேச அளவில் பாரதத்திற்கு அதன் ராஜ்ஜிய பரிபாலனத்திற்கும் மேலும் வலு சேர்ப்பதாகவே அமையும்.