சிவசேனா எதிர்ப்பு; மதப்பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பு: பால்தினகரன் குடும்பத்தை திருப்பி அனுப்பிய இலங்கை!

சிவசேனா எதிர்ப்பு; மதப்பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பு: பால்தினகரன் குடும்பத்தை திருப்பி அனுப்பிய இலங்கை!

Share it if you like it

இலங்கையில் மத பிரசாரம் மற்றும் கூட்டம் நடத்த கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரன் குடும்பத்தினருக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இயேசு அழைக்கிறார் என்கிற பெயரில் கிறிஸ்தவ சபையை நடத்தி வருபவர் பால் தினகரன். இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் ஜெபக் கூட்டங்களை நடத்தி வருவதோடு, மத மாற்றத்திலும் ஈடுபட்டு வருகிறார் என்கிற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. மேலும், இவர் முறையாக வரிமான வரி செலுத்தாததாகக் கூறி, வரிமான வரிச் சோதனையும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழில், இலங்கையில் மார்ச் 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 தினங்கள் மதக் கூட்டம நடத்த ஏற்பாடு செய்திருந்தார் பால் தினகரன். இதற்காக, யாழ்பாணம் முழுவதும் போஸ்டர்களை அச்சடித்து ஒட்டியதோடு, துண்டுப் பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர். இதில், பால் தினகரன் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பால் தினகரன் குடும்பத்தினர் இலங்கையில் மதக் பிரசாரம் மற்றும் கூட்டம் நடத்த, யாழ்ப்பாணம் சிவசேனை அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் பால் தினகரன் வருகைக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து யாழ் முழுவதும் ஒட்டினர். அதில், யாழ் சிவபூமி. மத மாற்றி பால் தினகரனே கால் வைக்காதே என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. மேலும், பால் தினகரன் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 500-க்கும் மேற்பட்டோர் போலீஸிலும் புகார் செய்தனர். அதில், வர்த்தக விசாவில் வருகை தரும் ஒருவர் மதப் பரப்புரையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். அதோடு, மதப் பிரசாரம் என்கிற பெயரில் பால் தினகரன் குடும்பத்தினர் மத மாற்றத்தில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. ஆகவே, பால் தினகரன் குடும்பத்தினர் மதப் பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, கொழும்பு மற்றும் கண்டியில் மதம் சார்ந்த நிகழ்வில் ஈடுபட்ட பால் தினகரன் குழுவினர், 23-ம் தேதி மாலை 4 மணிக்கு தனியார் விமானம் மூலம் இரத்மலான விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது, பால் தினகரன் குழுவினரை வெளியேற அனுமதிக்க முடியாது என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தடை விதித்தனர். தொடர்ந்து, அந்த குழுவினர் அனைவரின் பாஸ்போர்ட்களையும் வாங்கிக்கொண்டு யாழ்ப்பாணம் நகரிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்க அனுமதித்தனர். அதேசமயம், மதக் கூட்டம் மற்றும் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்று தெரிவித்து விட்டனர். பின்னர், பால் தினகரன் குழுவினர் இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.


Share it if you like it