ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் போராட்டம்.
ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள், பூந்தமல்லி பகுதியில் விடுதியில் தங்கி பணிசெய்து வருகின்றனர். கடந்த புதன்கிழமை விடுதியில் சாப்பிட்ட உணவால் 100- க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்த அரசு மருத்துவமனைகளில் 2 நாட்கள் சிகிச்சை சிகிச்சை பெற்ற நிலையில் 8 பெண்கள் மட்டும் இன்னும் பணிக்கு திரும்பவில்லை என 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் நள்ளிரவில் இருந்து போராடி வருகின்றனர். 8 பெண்களின் நிலை குறித்து அனைவருக்கும் தமிழக அரசு உடனே தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
உணவு உண்ட 8 பேர் இறந்து விட்டதாக அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://mobile.twitter.com/VinojBJP/status/1472054828297719808
https://mobile.twitter.com/CTR_Nirmalkumar/status/1472105096687153154