தி.மு.க. பத்திரிகையாளர்களை எவ்வாறு எல்லாம் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது என அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் புதிய தலைமுறை ஊடக நிருபருக்கும் நேற்றை தினம் கமலாலயத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம், தற்போது விவாதபொருளாக மாறியுள்ளது. அந்த வகையில், ஜனநாயக உரிமையா? பத்திரிகை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலா? எனும் தலைப்பில் விவாதம் ஒன்று நடத்தப்பட்டது. இதில், மூத்த பத்திரிகையாளர் பா.கி., ஜென்ராம், அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி, தி.மு.க.வை சேர்ந்த அரசகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, ஸ்ரீராம் சேஷாத்ரி பேசும் போது இவ்வாறு கூறினார் ; கட்சிகாரர்களை போல நிருபர்கள் கேள்வி கேட்டால், அதற்குரிய பதில் தான் வரும். இதைதான், அண்ணாமலை செய்து இருப்பதாக நான் பார்க்கிறேன். சில வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருக்கிறார். அது, உணர்ச்சியின் வெளிப்பாடாக தான் நான் பார்க்கிறேன். இதனை, அனைத்து தலைவர்களும் செய்து இருக்கிறார்கள். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, போன்றவர்களுக்கும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருக்கிறது. நீ யார்? என்று அனைவருமே கேட்டு இருக்கிறார்கள்.
தினகரன் எரிப்பு சம்பவத்தில் அழகிரிக்கு தொடர்பு இருக்கிறதா? என ஜெயா டிவி நிருபர் கருணாநிதியிடம் கேள்வி கேட்ட போது நீ தான்டா கொலைகாரன் பன்னாடை என்று கூறினார். அதேபோல, இலங்கை தமிழர்களுக்கு உரிமை பெற்று தருவதில் தி.மு.க. மந்தமாக செயல்படுகிறதா? என்ற கேள்வி கேட்ட போது வரியா நீயும் நானும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொள்ளலாம் என பதில் அளிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.