ஸ்டாலின்தான் வாராரு… நல்லாட்சி தரப் போறாரு… திராவிட மாடல் அவலம்: இளம்பெண் வீடியோ வைரல்!

ஸ்டாலின்தான் வாராரு… நல்லாட்சி தரப் போறாரு… திராவிட மாடல் அவலம்: இளம்பெண் வீடியோ வைரல்!

Share it if you like it

திராவிட மாடல் ஆட்சியின் அவலநிலை குறித்து இளம்பெண் ஒருவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் ஆட்சி என்று கூறி வருகின்றனர். ஆனால், இந்த திராவிட மாடல் ஆட்சியில் தினமும் வெட்டுக்குத்து, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதோடு, போதையில் தள்ளாடும் தமிழகமாகவும் இருந்து வருகிறது. இதனால், திராவிட மாடல் ஆட்சியை பலரும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். அந்த வகையில், திராவிட மாடல் ஆட்சியின் அவலத்தை விளக்கி இளம்பெண் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், சமீபத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் இருந்து வருவது போல தொடங்குகிறார். இதன் பிறகு நடக்கும் காட்சிகள் திராவிட மாடல் அரசின் அவலத்தை அம்பலப்படுத்துகிறது. இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் திராவிட மாடல் அரசின் லட்சணத்தை வசைபாடி வருகின்றனர். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…


Share it if you like it