ஹிந்தி எதிர்ப்பை விடுங்கய்யா… முதல்ல தமிழை காப்பாத்துங்கய்யா!

ஹிந்தி எதிர்ப்பை விடுங்கய்யா… முதல்ல தமிழை காப்பாத்துங்கய்யா!

Share it if you like it

ஹிந்தி மொழியை எதிர்க்கிறேன் என்ற பெயரில், தமிழகத்தில் மெல்ல மெல்ல அழிந்து வரும் தமிழ் மொழி மீது விடியல் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில், ஹிந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம். தமிழ் ஆங்கிலம் தவிர பிற மொழிகளுக்கு அனுமதி கிடையாது. இதுதான், திராவிட மாடல் ஆட்சி என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மேடை தோறும் கூறி வருகிறார். அதே கருத்தினை, தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, பேசிய அமைச்சர் பொன்முடி, நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. எந்த ஒரு மொழிக்கும் எதிராக நாங்கள் இல்லை. இந்தி படிக்க விரும்பினால் அதை வெளியே சென்று படிக்கலாம். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இந்தி படித்தவர்கள் தான் தமிழ்நாட்டில் பானி பூரி விற்கிறார்கள் என்று கூறியிருந்தார். இப்படியாக, ஹிந்தி மொழிக்கு எதிராக விடியல் அரசு தொடர்ந்து வன்மத்தை உமிழ்ந்து வருகிறது.

இதனிடையே, கடந்த மே மாதம் 10 மற்றும் 12 வகுப்பு மாணவ – மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. அந்த வகையில், 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த (20.6.2022) வெளியாகி இருந்தது. அதன்படி, கோவை அரசு பள்ளியில் பயின்று வரும் உ.பி. மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன் ரிஷப் குமார் பொதுதேர்வில் 500-க்கு 461 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்து இருந்தான். அதேவேளையில், தமிழ் தேர்வில் 87 மதிப்பெண்களை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தான். அதே சமயத்தில், தமிழை தாய் மொழியாக கொண்ட 47,000 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழ் தேர்வில் படுதோல்வியை தழுவி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில், மெல்ல மெல்ல அழிந்து வரும் தமிழ் மொழியை காப்பாற்ற விடியல் அரசு முதலில் முன்வர வேண்டும். அதன்பிறகு, ஹிந்தி மொழிக்கு எதிராக கருத்து தெரிவிக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

/https://mediyaan.com/amithsha-official-language-dmk-stalin-bjp-narayanthirupathi/?fbclid=IwAR0BqbnTpLEBhN4-ivmCU4YZGx7HQ21vNFoCBAGKuCBzPss-sa0QPNT5T9s

Image


Share it if you like it