தி.மு.க., ஸ்டாலின் சொத்து ரூ.1,31,000 கோடி: அண்ணாமலை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்!

தி.மு.க., ஸ்டாலின் சொத்து ரூ.1,31,000 கோடி: அண்ணாமலை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்!

Share it if you like it

தி.மு.க. மற்றும் ஸ்டாலின் சொத்து மதிப்பு 1,31,000 கோடி ரூபாய் என்று தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிரடி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இதனால், அவரது வாட்ச் விவகாரத்தை கிளப்பினார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இது அண்ணாமலையை உசுப்பேற்றி விடவே, தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஏப்ரல் 14-ம் தேதி நெருங்க நெருங்க தி.மு.க.வினரின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியது. நேற்றிலிருந்தே இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்பார்த்தபடியே இன்று காலை சென்னையிலுள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தி.மு.க.வின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாநிலத் தலைவரான பிறகு மாதம் 8 லட்சம் ரூபாய் செலவாகிறது. எனது வீட்டு வாடகை, உதவியாளர்களுக்கான ஊதியத்தை நண்பர்கள்தான் தருகிறார்கள். காருக்கு கட்சிதான் பெட்ரோல் போடுகிறது” என்றவர், தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், மைத்துனர் கலாநிதி மாறன் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துப் பட்டியல் மற்றும் தி.மு.க. அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, துரைமுருகன், பொன்முடி, அன்பில் மகேஸ், எம்.பி.க்கள் கனிமொழி, ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டார். இதன்படி, தி.மு.க.வின் சொத்து மதிப்பு 1,31,000 கோடி ரூபாய் என்று அண்ணாமலை தெரிவித்தார்.


Share it if you like it