முதலீட்டை ஈர்க்கவா? முதலீடு செய்யவா?: எதிர்க்கட்சி தலைவர் சரமாரி கேள்வி!

முதலீட்டை ஈர்க்கவா? முதலீடு செய்யவா?: எதிர்க்கட்சி தலைவர் சரமாரி கேள்வி!

Share it if you like it

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 9 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். அந்த வகையில், அரசு அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்வரை வழியனுப்பி வைத்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினிடம் இவ்வாறு கேள்வி எழுப்பி இருக்கிறார் ;

தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாகக் கூறி ஏற்கெனவே துபாய்க்கு குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வந்தார் ஸ்டாலின். ரூ 6,000 கோடி முதலீடு வரும் என வாயால் வடை சுட்டார். இதுவரை எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை. இப்போது, சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் மீண்டும் சுற்றுலா மேற்கொண்டிருக்கிறார். வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா? அல்லது முதலீடு செய்யப்போகிறாரா? என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என கூறியுள்ளார்.


Share it if you like it