காலில் ஷூ, கையில் உரை… நெருப்பில்லா அடுப்பு: சமத்துவ பொங்கல் ஜோர்… ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

காலில் ஷூ, கையில் உரை… நெருப்பில்லா அடுப்பு: சமத்துவ பொங்கல் ஜோர்… ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

காலில் செருப்பு அணிந்தும், கையில் கையுரை அணிந்தும், நெருப்பே இல்லாத அடுப்பில் ஸ்டாலின் பொங்கல் பண்டிகையை கொண்டாடி இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பொங்கலுக்கு முன்பாக பல்வேறு இடங்களிலும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த சமத்துவ பொங்கலை அறிமுகப்படுத்தியது மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிதான். அதாவது, பொங்கல் பண்டிகை என்பது ஹிந்து தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதை ஒட்டுமொத்த தமிழர்களும், அதாவது கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களும் மதபாகுபாடின்றி கொண்டாட வேண்டும் என்று சொல்லி இப்படியொரு சமத்துவ பொங்கல் பண்டிகை திட்டத்தை அமல்படுத்தினார். இதில், பிற மதத்தினர் ஆர்வம் காட்டாவிட்டாலும், சிலர் கடமைக்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தனது சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் சமத்துவ பொங்கலை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் பசுமாட்டுக்கு ஸ்டாலின் கொடுத்த கீரைக்கட்டை மாடு தின்ன மறுத்துவிட்டது. இதை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் ஏகப்பட்ட மீம்ஸ்கள் தயார் செய்ய, அதை வைத்து நெட்டிசன்கள் ஸ்டாலினை கலாய்த்து வந்தனர். இதேபோல, காவலர்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் ஸ்டாலின்.

இதையடுத்து, தனது சொந்த ஊரான திருவாரூக்கு குடும்பத்துடன் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். இதையொட்டி, நத்தம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில், மனைவி துர்காவுடன் கலந்துகொண்டார் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில்தான், ஸ்டாலின் காலில் ஷூ அணிந்தும், கையில் உரை அணிந்தும், எரியாத அடுப்பில் பொங்கல் வைத்து கொண்டாடி இருக்கிறார். இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், வழக்கம்போல மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களது கடமையைத் தொடங்கி விட்டார்கள். இதைவைத்து நெட்டிசன்கள் ஸ்டாலினை கலாய்த்து வருகின்றனர்.

இதன் உச்சகட்டமாக ஒரு நெட்டிசன், இப்படியொரு பொங்கலை நான் பார்த்ததே இல்லை. ஒருவேளை சமத்துவ பொங்கலில் இப்படியெல்லாம் விதிமுறை இருக்கும்போல. காலில் ஷூ அணிந்து கொண்டு, எரியாத அடுப்பில் பொங்கல் வைக்கும் இந்த காட்சி காண்பதற்கரிது. இனிமேல் ஸ்டாலின் ஒன்று செய்யலாம். இனி சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் காலில் செருப்பு அணிந்து கொள்ளலாம் என்று அறிவித்து விட்டால் இதுபோன்ற சர்ச்சைகள் எழாது என்று குறிப்பிட்டிருப்பதுதான். தற்போது இந்த போட்டோதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.


Share it if you like it