தமிழகத்தில் தேசிய கொடியை அவமதிக்கும் மாநில உள்துறை – திமுகவின் தேசவிரோத அரசியல் முகம்

தமிழகத்தில் தேசிய கொடியை அவமதிக்கும் மாநில உள்துறை – திமுகவின் தேசவிரோத அரசியல் முகம்

Share it if you like it

கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியின் போது பார்வையாளர்கள் மைதானத்தில் இந்திய தேசியக்கொடி அடையாளம் கொண்டு போக தமிழக காவல்துறை மற்றும் தமிழக கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்ததும் பார்வையாளர்கள் கையில் இருந்த தேசிய கொடியை பறித்து அவமதித்ததும் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜக தலைவரின் எச்சரிக்கை அடுத்து பாரத தேசிய அடையாளங்கள் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் தேசிய கொடியை அவமதித்த காவல் துறை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியில் போட்டியை காண பாகிஸ்தான் ஆதரவாளர்களாக அந்த மைதானத்தில் திரண்ட பலரும் பாகிஸ்தான் தேசிய கொடி பச்சை நிற பாகிஸ்தான் ஜெர்சி அணிந்து சுதந்திரமாக அவர்களால் பாகிஸ்தானை ஆதரிக்க முடிந்தது. சென்னையில் இன் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த விளையாட்டுப் போட்டியில் கூட அவரவர் சொந்த விருப்பத்தின் பெயரில் பாகிஸ்தான் ஆதரவாளர்களாகவும் ஆப்கானிஸ்தான் ஆதரவாளர்களாகவும் அந்த நாட்டின் கொடிகளை கைகளில் ஏந்தி அந்நாட்டின் அடையாளங்களை உடுத்தியும் மைதானத்தில் போய் வீரர்களை உற்சாகப்படுத்த முடிந்தது. ஆனால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பார்வையாளர்களின் இந்தியர்களாக இந்திய தேசியக் கொடியை ஏந்தி அதன் அடையாளங்களோடு மைதானத்தில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதும் அவர்கள் கைகளில் கொண்டு போகப்பட்ட தேசிய கொடிகள் பறிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதும் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவரின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டாலும் இதை சாதாரணமாக கடந்து போக முடியாது.

காரணம் சாதாரணமாக தேசத்தின் தேசிய கொடி அதன் மாண்பை காவல்துறை அவமதிக்க முடியாது. அதை உணராதவர்கள் காவல் துறைக்கு தகுதியற்றவர்களே. இருந்தும் ஒரு மாநில காவல் துறை அதிகாரி தேசிய கொடியை அவமதிப்பார் எனில் இதன் பிண்ணனி விசாரிக்க பட வேண்டும்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய தேசிய கொடியை அடையாளத்தை அனுமதிக்க கூடாது என்று. தமிழக காவல்துறைக்கு உத்தரவை பிறப்பித்தது யார்? அவர்களின் நோக்கம் என்ன ? பிண்ணனி என்ன? என்பது விசாரிக்கப்பட வேண்டும் . மேலும் சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது நடைபெற்ற விவகாரம் என்பதால் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். தமிழக கிரிக்கெட் வாரிய பொறுப்பில் இருப்பவர் மாநில ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர் என்பதால் இது திமுகவின் இந்திய விரோத பிரிவினைவாத அரசியலின் முகமாகவும் இருக்கக்கூடும் என்பதால் நிச்சயம் தேசிய பாதுகாப்பு முகமையின் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும்.

கட்சி அரசியல் அப்பாற்பட்டு தேசிய உணர்வு என்பது இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு குடிமக்களுக்கும் அடிப்படையான உணர்வு . அதை பாதுகாப்பதிலும் கௌரவப்படுத்துவதிலும் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் தார்மீக கடமை இருக்கிறது. இதில் ராணுவம் காவல் துறை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்கு கூடுதல் பொறுப்பும் கடமையும் உண்டு . எங்கேயும் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டால் தேசிய இறையாண்மை இழிவுபடுத்தப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல் கடமையும் பொறுப்பும் காவல்துறைக்கு உண்டு. ஆனால் அந்த காவல்துறையை சார்ந்தவர்களே தேசியக் கொடியை அவமதிப்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் இல்லை . இதில் தேசியக் கொடியும் தேசியமும் கூட கட்சி அரசியல் சார்போடு பார்க்கப்படுவது முழுக்க முழுக்க தேசவிரோதத்தின் வெளிப்பாடு. இதை செய்பவர்களும் செய்வதற்கு பின்னிருந்து ஊக்குவிப்பவர்களும் நிச்சயமாக தேசவிரோதிகளே. அவர்கள் உடனடியாக தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

காரணம் ஒரு மாநிலத்தின் காவல்துறை பொறுப்பில் இருப்பவருக்கு தேசிய கொடியின் மகத்துவமோ அதை பாதுகாக்க வேண்டிய கடமையோ தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இதை தெரியாதவர்கள் தமிழக காவல்துறைக்கு வருவதற்கும் வாய்ப்பில்லை. இரண்டும் நடக்குமானால் தமிழகத்தின் காவல்துறை முழுவதுமாக சீரழிந்து விட்டது . அந்த மாநில காவல் துறையை வைத்திருக்கும் மாநில உள்துறை அமைச்சகமும் அமைச்சரும் ஒன்று முழுமையாக செயலிழந்து இருக்க வேண்டும் . அல்லது முழுமையான தேச விரோதிகளாக தேச விரோத ஆதரவாளர்களாக மாறி இருக்க வேண்டும். எதுவாயினும் தமிழகம் விபரீதத்தின் விளிம்பில் இருப்பதை இந்நிகழ்வு கோடிட்டு காட்டுகிறது. இதை மாகாண ஆளுநர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மாநிலத்தில் தேசவிரோதமும் உள்நாட்டு துரோகமும் தலைவிரித்தாடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் தலைநகரில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டிருப்பதற்கு தமிழக கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும். இந்நிகழ்விற்கு பின்னணியில் இருந்தவர்கள் அவர்களின் முழு பின்புறமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் . இதற்கு காரணமானவர்கள் தமிழக காவல்துறை தமிழக கிரிக்கெட் வாரியம் மாநில அரசு இயந்திரம் அனைத்திலும் இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். இதற்குத் தேவையான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இந்த விவகாரத்திற்கு உரிய தீர்வுகள் கிடைக்க பெறும் வரை தமிழகத்தில் எந்த ஒரு சர்வதேச போட்டியையும் நடத்த தமிழக கிரிக்கெட் வாரியத்திற்கு அனுமதிக்ககூடாது. தமிழகத்தில் தேசிய அளவிலான போட்டிகளையும் நடத்துவதற்கு அனுமதிக்ககூடாது .

தமிழக கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆளும் கட்சியின் முக்கிய பின்புலம் கொண்டவர். இந்த விளையாட்டு மைதானம் இருக்கும் இடம் அந்தத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மாநில முதல்வரின் மகன் . மாநிலத்தின் ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் பொறுப்பிலும் இருப்பவர். அவ்வகையில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பொறுப்பில் இருப்பவரும் அவரின் நெருங்கிய சகாவாக இருக்கும் தமிழக கிரிக்கெட் வாரிய பொறுப்பாளரும் நேரடியாக தேசிய பாதுகாப்பு முகமையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தமிழக காவல்துறைக்கு தேசிய கொடியை அனுமதிக்க கூடாது என்ற வகையில் வாய் வழியான உத்தரவை வழங்கியது யார்? அதன் பின்புலம் என்ன ? என்பதை தமிழக மக்களுக்கு முழுவதுமாக அம்பலப்படுத்த வேண்டும்.

பாரத தேசத்தின் தோல்வியை விரும்புபவர்களும் பகை நாடான பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடுபவர்களும் பாகிஸ்தானின் அடையாளத்தோடும் தேசிய கொடியோடும் வலம் வந்தவர்களும் பெரும்பாலும் தமிழகத்தின் ஆளுங்கட்சியின் பின்புலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மேலும் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணி கட்சிக்காரர்கள் பலரும் திமுகவின் வழியிலேயே பாரதத்தின் தோல்வியையும் பகைநாட்டின் வெற்றியையும் விரும்புகிறார்கள். அவ்வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் ஆதரவு கொடியோடும் அடையாளங்களோடும் மைதானத்தில் பங்கேற்ற அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து தமிழகத்தில் தலை விரித்தாடும் பகைநாட்டு ஆதரவு தேசிய விரோத பின்னணியை முழுவதுமாக அம்பலப்படுத்த வேண்டும்.

பாகிஸ்தான் அணியினர் தோல்வியுற்ற போதும் பாரதத்தின் அணியினர் வெற்றி பெற்ற போதும் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பியது மத ரீதியான துவேஷம் என்று பேசியவர்கள் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை. விருந்தோம்பல் விளையாட்டில் சகோதரத்துவம் பற்றி எல்லாம் பாடம் எடுத்த உதயநிதியார்கள் இந்த நிமிடம் வரை அவர்களின் சொந்தத் தொகுதியில் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதும் அதில் அவர்களின் அரசு இயந்திரமான தமிழக காவல்துறை ஈடுபட்டதற்கும் இதுவரையில் வாய் திறந்து பதில் அளிக்காதது அவர்களின் கள்ள மவுனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

தேசியக்கொடியை அவமதித்தத காவலர் மீது அவரின் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுத்து அவரை பலிக்கடா ஆக்கிவிட்டு இந்த விவகாரத்தை மூடி மறைத்து விடலாம் என்று நினைக்கும் தமிழக மாநில காவல் துறைக்கும் அதன் பின்னிருக்கும் மாநில உள்துறை மற்றும் முதல்வர் உள்ளிட்ட அதிகார மையங்களுக்கும் மாநில ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சரும் உரிய பதிலடி தர வேண்டும். இது எதிர்காலத்தில் கட்சி அரசியல் என்ற பெயரில் தேச விரோத நடவடிக்கைகளிலும் தேசிய இறையாண்மை அவமதிப்பிலும் இறங்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை பாடமாக இருக்க வேண்டும்.

ஒரு நாட்டின் தேசிய கொடியை அவமதிப்பது என்பது தேசத்தை அவமதிக்கும் நிகழ்வாகவே கருதப்படும் .இதை செய்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் கடமையும் அதிகாரமும் உள்ள காவல்துறையே இதை செய்வது மாநிலத்தின் காவல்துறை முழுவதுமாக சீரழிந்ததன் வெளிப்பாடு.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் பிரிவினை வாதமும் தேச விரோதமும் தமிழகத்திற்கு மட்டும் ஆபத்து விளைவிப்பவை அல்ல. இது ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிவு மட்டுமல்ல. தமிழகத்தில் தலைவிரித்தாடும் தேசவிரோதமும் உள்நாட்டு துரோகமும் அதை பின்னிருந்து மாநிலத்தின் ஆளும் கட்சியை ஆதரித்து ஊக்குவிப்பதும் இந்த தேசத்தின் தேசிய இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் தேசவிரோத நிகழ்வுகள் எல்லாம் தமிழகத்தை மட்டும் பாதிக்கும் அச்சுறுத்தல் இல்லை. அது மாகாணத்தை கடந்து தேசத்திற்கான அபாயம் தேசிய அச்சுறுத்தல் என்பதை உணர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே தமிழகத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக தேச விரோதமும் உள்நாட்டு விரோதமும் அரசியல் பின்புலத்தோடு வளர்க்கப்படும் வாக்கு வாங்கி அரசியல் முடிவுக்கு வரும். அது மட்டுமே எதிர்காலத்தில் தமிழகம் இன்னொரு காஷ்மீராகவும் மேற்கு வங்கமாகவும் மாறுவதை தடுக்க முடியும். கடந்த காலங்களில் காஷ்மீரத்திலும் சமகாலத்தில் மேற்கு வங்கத்திலும் நடைபெறும் இழப்புக்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்காலத்தில் தமிழகத்தில் நிகழா வண்ணம் தடுக்க முடியும். தமிழகத்திலேயே கடந்த காலங்களில் நிகழ்ந்த தேச விரோத நடவடிக்கைகள் தேசிய இழப்புகள் போல துரதிஷ்டங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க முடியும் . அதற்கு இந்த மண்ணின் ஆட்சியாளர்கள் கட்சி அரசியல் வாக்கு வங்கி அரசியல் என்ற பெயரில் இங்கு இருக்கும் மக்களை தேசியத்திற்கு எதிராக திருப்புவதும் தேசவிரோதிகளை. ஆதரித்து வளர்ப்பதையும் முடிவுக்கு கொண்டு வர முடியும்.


Share it if you like it