மாணவன் தனுஷ் மரணத்திற்கு தி.மு.க-வே முழுப்பொறுப்பு பா.ஜ.க தலைவர் பாய்ச்சல்..!

மாணவன் தனுஷ் மரணத்திற்கு தி.மு.க-வே முழுப்பொறுப்பு பா.ஜ.க தலைவர் பாய்ச்சல்..!

Share it if you like it

கிராமத்து மாணவர்களின் திறனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். நீட் தேர்வில் விலக்கு கேட்பது அவமானமாக இல்லையா? என்று நீதிபதி கிருபாகரன் 2017-ஆம் ஆண்டு தனது எண்ணத்தை இவ்வாறு வெளிப்படுத்தி இருந்தார். பல வல்லுநனர்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள், ஆலோசகர்கள், என பலர் ”நீட்” தேர்விற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், தி.மு.க, தி.க, வி.சி.க, மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்கள், உட்பட பலர் நீட் தேர்விற்கு தங்களின் கடும் எதிர்ப்பினை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக தெரிவித்து வருகின்றனர் என்பது மக்களின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது.

படிக்கும் மாணவர்களிடம் நம்பிக்கையை விதைக்காமல், நீட் தேர்வு குறித்து அச்சம் உருவாக்கும் வகையில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பணம் படைத்த முதலைகள், மற்றும் மருத்துவ கல்லூரி என்னும் போர்வையில் மாணவர்களிடம் பணத்தை பறிக்கும் மாபியாக்கள் தொடர்ந்து பொய் தகவலை பரப்பியதன் விளைவாகவே மாணவர்கள் தற்கொலை முடிவை எடுக்கின்றனர் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் மாணவன் தனுஷ் மரணத்திற்கு தி.மு.க-வே காரணம் என்று தனது கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

[gads]


Share it if you like it